கடைசியா டாடா பார்த்துவிட்டேன்... மறக்கவே முடியாது... கார்த்தியின் பாராட்டில் கவின் நெகிழ்ச்சி!

சென்னை: பிக் பாஸ் புகழ் கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கவின், அபர்னா தாஸ், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை கணேஷ் பாபு இயக்கியிருந்தார்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை கமல், சூரி உள்ளிட்ட பிரபலங்களும் பாராட்டியிருந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தியும் தனது டிவிட்டரில் டாடா திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

 கவினுக்கு கை கொடுத்த டாடா

கவினுக்கு கை கொடுத்த டாடா

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர் கவின். அதேபோல், பீட்சா, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற கவின், தற்போது டாடா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

முன்னதாக கவின் நடிப்பில் உருவான லிஃப்ட் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. 2021ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும், ஓடிடியில் வெளியானதால் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது திரையரங்குகளில் ரிலீஸான டாடா, கவினுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்தப் படத்தை கமல், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பாராட்டினர்.

 டிவிட்டரில் வாழ்த்திய கார்த்தி

டிவிட்டரில் வாழ்த்திய கார்த்தி

கவின் ஜோடியாக பீஸ்ட பட புகழ் அபர்னா தாஸ், முக்கியமான கேரக்டர்களில் பாக்யராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் டாடா படத்தில் நடித்துள்ளனர். கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்தப் படம் இளம் தம்பதியினர் பெற்றோர் ஆனால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதை காமெடி ப்ளஸ் செண்டிமெண்டாக எடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர் கார்த்தி டாடா படத்தை பார்த்துவிட்டு ட்வீட் போட்டுள்ளார்.

 வாழ்வில் மறக்கவே முடியாது

வாழ்வில் மறக்கவே முடியாது

அதில், "கடைசியாக டாடா படத்தைப் பார்த்துவிட்டேன். என்னவொரு அற்புதமான படம், சிறப்பான எழுத்து, மேக்கிங் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. கவின் உட்பட அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். டாடா படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். உங்களைக்கண்டு பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் கவினுக்கு செல்போனில் தொடர்புகொண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார் கார்த்தி. அப்போது அவர், டாடா படத்தை வாழ்வில் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் எனக் கூறியுள்ளார்.

 கவின் நெகிழ்ச்சியுடன் நன்றி

கவின் நெகிழ்ச்சியுடன் நன்றி

கார்த்தியின் டிவிட்டர் பதிவுக்கும், போன் செய்து பாராட்டியதற்கும் நன்றி தெரிவித்துள்ளார் கவின். அதுகுறித்து ட்வீட் செய்துள்ள கவின், "ஒரு ஐந்து நிமிட போன் கால். நீங்கள் என்னிடம் பேசியதில், 'இந்தப் படத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்' என சொன்னதை நான் மறக்கவே மாட்டேன். வாழ்க வளமுடன் வந்தியத் தேவன்" என பதிவிட்டுள்ளார். கார்த்தி, கவின் இருவரின் டிவிட்டர் பதிவும் ட்ரெண்டாகி வருகிறது.

 அடுத்தடுத்து பட வாய்ப்புகள்

அடுத்தடுத்து பட வாய்ப்புகள்

லிஃப்ட், டாடா படங்கள் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக வலம் வரும் கவின், விரைவில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் மேலும் சில பட வாய்ப்புகளும் கவினுக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X