ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி

By Shankar

ரஜினி படத் தலைப்பு, கேரக்டர்கள் மற்றும் கதையை ரீமேக் செய்யும் மோகம் கார்த்திக்கு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

முன்பு ரஜினியின் புகழ்பெற்ற பாத்திரப் பெயரான அலெக்ஸ் பாண்டியன் பெயரை வைத்து சினிமா எடுத்தவர், இப்போது அந்தப் பாத்திரம் இடம்பெற்ற மூன்று முகம் படத்தையே ரீமேக் பண்ண ஆரம்பித்துவிட்டார்.

மூன்று முகம்

மூன்று முகம்

ரஜினி மூன்று வேடங்களில் நடித்து 1982-ல் ரீலீசாகி வெற்றிகரமாக ஓடிய ‘மூன்று முகம்'. 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த இந்தப் படத்தை அதே பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.

தமன்னா - கார்த்தி

தமன்னா - கார்த்தி

இதில் ரஜினி வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். ஏற்கனவே இருவரும் ‘பையா', ‘சிறுத்தை' படங்களில் இணைந்து நடித்துள்ளனர். காதல் கிசுகிசுக்களிலும் வஞ்சனையின்றி அடிபட்டனர்.

விஷ்ணுவர்தன்

விஷ்ணுவர்தன்

பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இப்படத்தை இயக்குகிறார்.

நம்பிக்கை

நம்பிக்கை

ரஜினிக்கு ‘மூன்று முகம்' திருப்புமுனை படமாக அமைந்தது. அலெக்ஸ்பாண்டியன் என்ற போலீஸ் கேரக்டரில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதன் ரீமேக் தனக்கும் முக்கிய படமாக இருக்கும் என்று கார்த்தி நம்புகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.

காளி

காளி

ஏற்கெனவே ரஜினி நடித்த படமான காளி- தலைப்பை தனது இன்னொரு படத்துக்கு சூட்டியுள்ளார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X