தூத்துக்குடியில் துவங்கும் கார்த்தியின் ஜப்பான் படத்தின் சூட்டிங்.. எப்ப துவங்குதுன்னு தெரியுமா?

சென்னை : நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் ரிலீசாகியுள்ளன.

இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை கொடுத்துள்ளன. கார்த்தியின் ரசிகர்கள் இதனால் உற்சாகமடைந்துள்ளனர்.

அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் சர்தார் படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தன்னுடைய சிறப்பான நடிப்பால் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டி வருகின்றார். சுல்தான் படத்தை தொடர்ந்து அவரது விருமன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் இந்தப் படத்தில் கார்த்தி இரண்டாவது முறையாக இணைந்திருந்தார்.

விருமன் படம்

விருமன் படம்

கொம்பன் படத்தில் கிராமத்து பின்புலத்தில் நடித்திருந்த கார்த்தி, விருமன் படத்திலும் கிராமத்து கதைக்களத்திலேயே நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. தன்னுடைய தாயின் மரணத்திற்கு காரணமான தந்தை திருந்தும் வகையில் தொடர்ந்து நடந்துக் கொள்ளும் வகையில் கார்த்தியின் கேரக்டர் இந்தப் படத்தில் அமைந்திருந்தது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 30ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் கார்த்தி. இந்தப் படமும் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தக் கேரக்டரில் முன்னதாக ரஜினி மற்றும் விஜய் நடிக்க தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்தார் படம்

சர்தார் படம்

இதனிடையே வரும் தீபாவளியையொட்டி கார்த்தியின் சர்தார் படமும் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் வயதான கேரக்டர் மற்றும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. அதில் வித்தியாசமான கெட்டப்புகளில் கார்த்தி தோன்றியிருந்தார்.

ஜப்பான் படம்

ஜப்பான் படம்

இந்தப் படங்கள் அவரது ரசிகர்களுக்கு மிகச்சிறந்த உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் அரசியல் களத்தில் உருவாகவுள்ள ஜப்பான் படத்தில் கமிட்டாகியுள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் சூட்டிங் நாளை மறுநாள் தூத்துக்குடியில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கார்த்தியுடன் ராஷ்மிகா மந்தனா, புஷ்பா படத்தில் நடித்த சுனில் ஆகியோர் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். ஜோக்கர், குக்கூ போன்ற வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை கொடுத்துள்ள ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜப்பான் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X