புனேவில் முகாமிடும் தேவ் படக்குழு: இந்த வார இறுதியில் படப்பிடிப்பு துவங்க திட்டம்
தேவ் படக்குழு புனேவில் படப்பிடிப்பை துவங்க உள்ளது.
சென்னை: வெள்ளத்தில் சிக்கிய கார்த்தி மீண்டும் படப்பிடிப்பை துவங்க உள்ளார்.
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடித்து வரும் அடுத்த படம் தேவ். இப்படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் படக்குழு சிக்கியது. கார்த்தி அதிர்ஷடவசமாக உயிர்த் தப்பியதாகக் குறிப்பிட்டார்.
குலு மணாலியில் முழு வீச்சுடன் படப்பிடிப்பு நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் படப்பிடிப்பு ரத்தானது. வெள்ளப்பாதிப்பிலிருந்து தப்பித்த படக்குழு அடுத்ததாக புனேவிற்கு பயணமாகியுள்ளது.
தற்போது புனே, கர்நாடகாவின் மேற்கு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒரு பயணப் பாடலை அப்பகுதியில் படமாக்க உள்ளனராம். கார்த்தியும், ரகுல் ப்ரீத் சிங்கும் வந்தவுடன் இந்த வார இறுதியில் படப்பிடிப்பு முழு வீச்சில் ஆரம்பமாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் மூலம் தீரன் திரைப்படத்திற்குப் பிறகு கார்த்தியுடன் மீண்டும் இணைகிறார் ரகுல்ப்ரீத் சிங். லஷ்மண் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் குலு மணாலியில் நிலைமை சரியானதும் மீண்டும் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











