'கண்ணாடி தூள்கூட தூசிதான் குணசேகரா' வெளியானது கோடியில் ஒருவன் டீசர்.. அதிரடி காட்டும் விஜய் ஆண்டனி

By

சென்னை: விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

ஆள், மெட்ரோ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம், 'கோடியில் ஒருவன்'.

ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் படமான இதில், சூப்பர் சுப்பராயன் வில்லனாக நடித்துள்ளார்.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

கே.ஜி.எஃப் படத்தில் நடித்த ராமச்சந்திர ராஜூ, பிரபாகர் உட்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்துள்ளார். டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய்குமார் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

கார்த்தி வெளியிட்டார்

கார்த்தி வெளியிட்டார்

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இதன் டீசரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். டிரைலரில் விஜய் ஆண்டனி மிரட்டலாக அதிரடி காட்டுகிறார். இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி தூள் கூட

கண்ணாடி தூள் கூட

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் படம் வெளியாகிறது. படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். டிரைலரில் அதிரடி ஆக்‌ஷன் காட்சி இடம்பெற்றுள்ளது. 'அவன் தூசி' என சூப்பர் சுப்பராயன் சொல்ல, 'கண்ணாடி தூள் கூட தூசுதான் குணசேகரா, கண்ணுல பட்டா ரத்தமா மாறிடும்' என்ற மாஸ் வசனம் இடம்பெறுகிறது.

பின்னணி பாடல்

பின்னணி பாடல்

அச்சம் இல்லை மனமே என்ற பின்னணி பாடலுடன் டிரைலர் முடிகிறது. இந்த டீசர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான சில நிமிடங்களியே ஆயிரக்கணக் கானோர் இந்த டீசரை பார்த்துள்ளனர். ரசிகர்கள் இந்த டீசரை பாராட்டி தள்ளியுள்ளனர்.

பிச்சைக்காரன் 2

பிச்சைக்காரன் 2

நடிகர் விஜய் ஆண்டனி, பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள தமிழரசன் படத்தில் நடித்து முடித்துள்ளார். நவீன் இயக்கும் அக்னி சிறகுகள், 'வாய்மை' செந்தில்குமார் இயக்கும் காக்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் இயக்கும் படங்களிலும் பிச்சைக்காரன் 2 படத்திலும் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X