Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சூட்டிங் ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி: சொன்னா நம்பிதான் ஆகணும்!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமைத்து அவரே பாடியுள்ள 'பொன்னி நதி' எனத் தொடங்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவில்
ஆடித்
திருவிழா
கொண்டாடப்
போகும்
ஏ.ஆர்.
ரஹ்மான்..
ஹாஸ்டனில்
ஒலிக்கப்
போகும்
பொன்னி
நதி!

கனவு நனவானது
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் தமிழ் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் முதல் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் தீவிர முயற்சிகள் எடுத்தனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசைகளில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமும் ஒன்று என அனைவரும் அறிந்ததே. ஆனால், பலரின் கனவு தற்போது நனவாகியுள்ளது.

இரண்டவது முயற்சி
மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை மணிரத்னம் பல ஆண்டுகளுக்கு முன்னரே விஜய், மகேஷ் பாபு ஆகியோர் நடிப்பில் எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கை கூடாமல் போன இந்த மாபெரும் கனவுத் திட்டத்தை மணிரத்னம் இப்போது சாத்தியமாக்கியுள்ளார்.

மிரட்டிய டீசர்
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் படு மிரட்டலாக உருவாகியிருந்த இந்த டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. 'பொன்னியின் செல்வன்' படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகும் எனவும் ரசிகர்கள் காத்திருந்தனர். அது தற்போது 'பொன்னியின் செல்வன்' முதல் பாடல் மூலம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
'பொன்னியின் செல்வன்' முதல் பாடல் தற்போது வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியுள்ள 'பொன்னி நதி' பாடல், இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கார்த்தி போட்டுடைத்த ரகசியம்
அப்போது பேசிய கார்த்தி, படத்திற்காக மொத்த படக்குழுவினரும் ரொம்பவே உழைத்துள்ளதாகக் கூறினார். 'பொன்னியின் செல்வன்' செட்டை பார்க்க எப்போதும் பரபரப்பாகவே இருக்கும், இயக்குநர் மணிரத்னம் நேர்த்தியாக இந்தப் படத்தை இயக்கியதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பொன்னியின் செல்வன் தொடங்கிய போது கொரோனா லாக் டவுன் வந்துவிட்டதால், எல்லாமே கேள்விக்குரியாகிப் போனது. ஆனால், இரண்டு பாகங்களையும் மணிரத்னம் மொத்தமே 120 நாட்களுக்குள் எடுத்துவிட்டதாகக்" கூறி, ரகசியத்தை போட்டுடைத்துவிட்டார்.
Recommended Video

இனிமேல் இப்படி முடியாது
அதுமட்டும் இல்லாமல், "பொன்னியின் செல்வன் சூட்டிங்காக காலையில் 3 மணிக்கே எழும்பிவிடுவோம் என்றும், இனி இதுமாதிரி ஒருபடம் எடுக்க யாராலும் முடியவே முடியாது" எனக் கூறினார். அப்படி ஒருவர் இனி பிறந்து 30 வருடங்கள் கழித்து தான் வரமுடியும் எனவும், இயக்குநர் மணிரத்னத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டுத் தெரிவித்தார்.