”விக்ரம் ரோலக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு சூர்யாவிடம் கேட்ட முதல் கேள்வி”: கார்த்தி சுவாரஸ்யம்
சென்னை: கார்த்தியின் 'விருமன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு கார்த்தி பதிலளித்துள்ளார்.
அப்போது அவர், விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் பாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

விருமனுக்கு கிடைத்த வரவேற்பு
பருத்தி வீரனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கார்த்தி, அடுத்தடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'சிறுத்தை', 'மெட்ராஸ்' என தரமான படங்களில் நடித்து, ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார். இறுதியாக அவர் நடிப்பில் 'சுல்தான்' படம் வெளியாகிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான 'விருமன்' படம், சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில், அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கார்த்தி 15 ஆண்டுகள்
கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அதோபோல், தீபாவளிக்கு வெளியாகும் 'சர்தார்' படத்திலும் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். 2007ம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய கார்த்தி, இப்போது வெற்றிகரமாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

வாழ்த்தும் பாராட்டும்
விருமன் படத்தின் வெற்றிக்காகவும், கார்த்தி சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்ததையும் பல்வேறு பிரபலங்கள் பாராட்டியுள்ளதோடு, அவருக்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர். கார்த்தி நடித்து சூப்பர் ஹிட் அடித்த 'கைதி' படத்தின் இரண்டாம் பாகம், அடுத்தாண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனால், கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் மீதும் எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது.

சூர்யாவிடம் கேள்வி
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள கார்த்தி, விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் பற்றிய சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். அதில் "விக்ரம் படத்தில் சூர்யா வில்லனாக நடித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும், ஃபர்ஸ்ட் ரோலக்ஸ் கேரக்டர்ல எப்படி ஒத்துக்கிட்டப்பான்னு தான், சூர்யாவிடம் முதலில் கேட்டதாகவும்" கார்த்தி கூறியுள்ளார்.
Recommended Video

சூர்யா சொன்ன பதில்
அதற்கு சூர்யா என்ன பதில் சொன்னார் என்றும் கார்த்திக் கூறியுள்ளார். "ரொம்ப நாளாக இப்படியொரு வித்தியாசமான வில்லன் கேரக்டர் பண்ண நினைத்திருந்ததாகவும், அது கமல் சாருக்காகவும் அவர் மேல இருக்குற மரியாதைக்காகவும் நடித்ததாகவும்" சொல்லியுள்ளார். "ஆனால், அது இவ்வளவு பெருசா க்ளிக் ஆகும், ரசிகர்கள் இப்படி கொண்டாடுவாங்கன்னு எதிர்பார்க்கவில்லை" என்றும் சூர்யா கார்த்தியிடம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











