’பிரியாணி’யை சூப்பராய் சமைத்ததற்காக வெங்கட் பிரபுவுக்கு ‘ஐபோன்’: ஐஸ் வைக்கும் கார்த்தி!
சென்னை: விரைவில் திரைக்கு வர உள்ள 'பிரியாணி' படத்தை நன்றாக இயக்கியதற்காக வெங்கட் பிரபுவிற்கு ஐபோன் ஒன்றை பரிசளித்துள்ளாராம் கார்த்தி.
'சென்னை 28' மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானவர் வெங்கட் பிரபு. 'மங்காத்தா'வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தற்போது கார்த்தி, ஹன்சிகா நடிக்கும் 'பிரியாணி' படத்தை இயக்கி வருகிறார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள 'பிரியாணி' இப்போதே மணம் வீசத் துவங்கியுள்ளதாம்.

நொந்து நூடுல்ஸ் ஆன கார்த்தி...
பருத்திவீரனை அடுத்து சரியாகச் சொல்லிக் கொள்ளும் படி படம் ஒன்றும் கார்த்திக்கு அமையவில்லை என்பது உண்மை தான். அடுத்தடுத்து வந்த சகுனி, அலெக்ஸ்பாண்டியன் என அனைத்தும் பிளாப் ஆகியதில் நொந்து நூடுல்ஸ் ஆனார் கார்த்தி.

பிரியாணியில் கார்த்தி...
இந்நிலையில், வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கார்த்தி. ரசிகைகளின் எதிர்பார்ப்பிற்கேற்ப கார்த்தியை வித்தியாசமாக காட்டும் முயற்சியில் இறங்கிய வெங்கட்பிரபு, அதில் வெற்றியும் பெற்றார்.

வித்தியாசமான கெட்டப்...
‘மாமா, செளக்கியமா?' போபியாவில் மாட்டிக் கொண்டு அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கு இப்படம் வித்தியாசமாக அமைந்துள்ளதாம். எனவே, இப்படத்தில் அதிக ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் கார்த்தி.

ஐபோன் ‘ஐஸ்’....
படம் முடிவடையும் நிலையில், படத்தைப் பார்த்த கார்த்தி அப்படியே ஷாக் ஆயிட்டாராம். இயக்குர் வெங்கட் பிரபுவின் திறமையைப் பார்த்து மகிழ்ந்து அவருக்கு ‘ஐபோன் 5' ஒன்றை பரிசாகவும் அளித்திருக்கிறார் கார்த்தி.

வெங்கட்டுக்கு ஐபோன். அப்போ, ராஜேஷுக்கு?
கார்த்தி நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜாவும்' நன்றாகவே உள்ளதாம். வெங்கட் பிரபுக்கு ஐபோன் கொடுத்த கார்த்தி, ராஜேஷ்க்கு என்ன வாங்கி தரலாம் என யோசனையில் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











