twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்

    |

    சென்னை : பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் ரிலீசாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. 2018 ம் ஆண்டு ஜுலை 13 ம் தேதி ரிலீசான இந்த படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.70 கோடிகளை வசூலித்தது.

    அசால்டா புல்லட்டில் ரைடு போன பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ !அசால்டா புல்லட்டில் ரைடு போன பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ !

    முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் காதல், காமெடி கலந்து சொல்லப்பட்டது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. டி.இமான் இசையமைத்திருந்தார்.

    இலக்கிய நயமான பெயர்கள்

    இலக்கிய நயமான பெயர்கள்

    கார்த்தி, சாயிஷா, சத்யராஜ், பானுபிரியா, பிரியா பவானிசங்கர், சூரி, சாந்தி சங்கர், மோனிகா, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் சுத்தமான தமிழ் பெயர், அதிலும் இலக்கிய நயமாக வைக்கப்பட்டிருந்தது படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை கொடுத்தது.

    குடும்ப படம்

    குடும்ப படம்

    கடைக்குட்டி சிங்கம் படத்தை டைரக்டர் பாண்டிராஜே எழுதி, இயக்கி இருந்தார். குடும்ப உறவுகள், உறவுகளுக்கு இடையேயான பாச பிணைப்பு, விவசாயம் ஆகியவற்றை கூறுவதாக படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

    2 மொழிகளில் ரிலீஸ்

    2 மொழிகளில் ரிலீஸ்

    தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. .தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரில் வெளியிடப்பட்டது. தெலுங்கிலும் கார்த்திக்கு ரசிகர்கள் உள்ளதால் இந்த படத்தை இரு மொழிகளிலும் ரிலீஸ் செய்தனர்.

    மாற்றப்பட்ட ஹீரோயின்

    மாற்றப்பட்ட ஹீரோயின்

    இந்த படத்தில் முதலில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க அனுபமா பரமேஸ்வரனிடம் தான் பேசப்பட்டதாம். ஆனால் கடைசியில் பிரியா பவானிசங்கரை ஓகே செய்து விட்டனர். முதலில் படம் முழுவதும் தென்காசி மற்றும் புளியங்குடியில் தான் படமாக்க திட்டமிட்டது.

    Recommended Video

    பிரபலங்கள் எதிர்க்கும் CINEMATOGRAPH ACT 2021 Explained in Tamil | ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா
    பந்தயத்திற்கு அனுமதி மறுப்பு

    பந்தயத்திற்கு அனுமதி மறுப்பு

    ஆனால் படத்தின் துவக்கத்தில் வரும் மாட்டுவண்டி பந்தையத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகம் படப்பிடிப்பிற்கு அனுமதி தரவில்லை. இதனால் படத்தின் லொகேஷனை காரைக்குடிக்கு மாற்றினர். கடைசியாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால் அங்கு குறைந்த மாட்டு வண்டிகளை வைத்து படமாக்கப்பட்டது.

    English summary
    karthi starred kadaikutty singam completes 3 years of release. This movie was directed by Pandiraj and released on 2018 July 13 th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X