ரூ. 100 கோடி வசூல்.. 25வது நாளாக தொடரும் அதகளம்.. கார்த்திக்கு கௌரவம் சேர்த்த ‘கைதி’!

கைதி பட வசூல் ரூ. 100 கோடியை எட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

Recommended Video

Kaithi Box Office : கைதி படத்தின் முதல் வார வசூல் தொகை-வீடியோ

சென்னை: கார்த்தியின் முதல் ரூ. 100 கோடி வசூல் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை கைதி பெற்றுள்ளது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி பிகிலோடு சேர்ந்து ரிலீசான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த இப்படம் நாயகி மற்றும் பாடல்களே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதைக்களம்.

விஜய் படத்தோடு போட்டியிடுகிறதே, கைதி தப்பிப்பானா என பல கேள்விகள் எழுந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் கால்பந்து மாதிரி எட்டி மிதித்து விட்டு, இன்னமும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கைதிக்கு வரவேற்பு

கைதிக்கு வரவேற்பு

தமிழகத்தைப் போலவே கைதி ரிலீசான இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ரிலீசாகி 25 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை ரூ. 100 கோடியை கைதி வசூலித்திருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் கைதி ஓடி வருவதால் இந்த வசூல் இன்னமும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் படம்

முதல் படம்

இதன் மூலம் கார்த்தியின் முதல் ரூ 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை கைதி பெற்றுள்ளது. அதோடு, ரூ. 100 கோடி கிளப்பிலும் கைதி சேர்ந்து விட்டது. இதனால் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

சமீபத்தில் தான் தனுஷின் அசுரன் படமும் ரூ. 100 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது கைதியும் அந்தப் பட்டியலில் இணைந்து விட்டது. இப்படிப்பட்ட படங்கள் தான் வசூலில் சாதனை படைக்கும் என்ற இலக்கணத்தை உடைத்து கைதி, அசுரன் போன்ற படங்கள் சாதிப்பது சினிமா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தம்பி

தம்பி

கைதி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அடுத்ததாக கார்த்தி, ஜோதிகா இணைந்து நடித்துள்ள தம்பி படம் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான அப்படத்தின் டீசருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X