தொடர்ந்து ஏறுமுகத்தில் கைதி... தமிழகத்தில் முதல் வார இறுதியில் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கார்த்தியின் கைதி படம் முதல் வாரத்தில் வசூலித்த தொகை எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆயின. விஜய் நடிப்பில் பிகிலும் கார்த்தி நடிப்பில் கைதியும் ரிலீஸானது.
கைதி படத்தைக் காட்டிலும் விஜயின் பிகில் படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ஆனால் பிகில் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்ததால் பிகிலுக்கான கூட்டம் மூன்றாம் நாளிலேயே குறையத் தொடங்கியது.

நாளுக்கு நாள் அதிகரிப்பு
அதே நேரத்தில் கைதி படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் படம் பார்க்கும் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது.

டிக்கெட் கிடைக்கல
கைதி படம் வெளியிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் ஆனதால் மேலும் பல தியேட்டர்களில் கைதி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இருப்பினும் கைதி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றே மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில்..
இந்நிலையில் கைதி படம் ரிலீஸான முதல் வார இறுதியில் கைதி படம் தமிழகத்தில் மட்டும் 10.8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் நான்கு நாட்களில் கைதி படம் 1.45 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
கேரளாவில் அள்ளும் வசூல்
கேரளாவில் தொடர்ந்து கைதி படம் வெளியிடப்பட்ட தியேட்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த நான்கு நாட்களில் கைதி படம், 2.15 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் கேரளாவில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கைதி படம் வசூலித்திருக்கிறது.

ரூ 2.45 கோடி
தெலுங்கு மாநிலங்களிலும் கைதி படம் ஏறுமுகத்தை கண்டுள்ளது. குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டபோதும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் கைதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் கைதி படம் தெலுங்கு மாநிலங்களில் 2.45 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரோக்கியமான வசூல்
அமெரிக்காவிலும் ஓபனிங் வீக்கென்டில் கைதி படம் 150 ஆயிரம் டாலர்களை குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வசூல் கார்த்தியின் கேரியரில் ஒரு ஆரோக்கியமான வசூலாக பார்க்கப்படுகிறது.

உற்சாகம்
கைதி படத்திற்கான வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கைதி படம் மேலும் கூடுதல் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல் மற்றும் வசூலால் ட்ரீம் வாரியஸ் தரப்பு உற்சாகமடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











