Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆரம்பிக்கலாங்களா.. கைதி 2 படம் குறித்து பேசிய தயாரிப்பாளர்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை : நடிகர் கார்த்தி, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான படம் கைதி. ஆக்ஷனை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது.
இதையடுத்து மாஸ்டர் தற்போது விக்ரம் படங்களை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
4 படங்களை மட்டுமே இயக்கி சர்வதேச அளவில் புகழ்பெற முடியும் என்பதற்கு இவர் மிகச்சிறந்த உதாரணம்.
கையில் என்ன லவ் லெட்டரா ?.. கொஞ்சி கொஞ்சி விளையாடும் பாவ்னி -அமீர் !

கைதி படம்
நடிகர் கார்த்தி, நரேன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2019ல் வெளியான படம் கைதி. முன்னதாக மாநகரம் படத்தை இயக்கி கவனத்தை பெற்றிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கத் துவங்கியிருந்தார்.

மாஸ்டர் படம்
மாஸ்டர் படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் முடிந்தபின்பே கைதி படம் ரிலீசானதாகவும், அதன்பின்பே இத்தகைய படத்தை தான் இயக்கியது குறித்து மற்றவர்களுக்கு குறிப்பாக விஜய்க்கும் தெரியவந்ததாகவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சிறையிலிருந்து ரிலீசாகும் கைதி
கைதி படம், சிறையிலிருந்து வெளியில் வரும் ஆயுள்தண்டனை கைதி, தனது மகளை பார்க்கப் போகும்போது இடையில் சந்திக்கும் சம்பவங்கள் குறித்த கதைக்களத்துடன் வெளியானது. இந்தப் படத்தில் கார்த்தியின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக லோகேஷ் இந்தப் படத்தின்மூலமே அனைவராலும் அறியப்பட்டார்.

கைதி 2, விக்ரம் 3க்கான லீட்
தற்போது இவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் கைதி 2 மற்றும் விக்ரம் 3 படங்களுக்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக விக்ரம் படத்தை பார்ப்பதற்கு முன்னதாக தன்னுடைய கைதி படத்தை பார்க்க அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

விரைவில் கைதி 2
ஆங்கில படங்களை போல விக்ரம் மற்றும் கைதி இரண்டு படங்களும் இணைவது போல சில காட்சிகளையும் அமைத்துள்ளார். இதையடுத்து கைதி 2 படம் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைதி படத்தில் விடையளிக்கப்படாத சில கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கைதி தயாரிப்பாளர் ட்வீட்
இதனிடையே கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கைதி 2 ஆரம்பிக்கலாங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து விரைவில் கைதி 2 படத்திற்கான வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்திலும் கார்த்தியே நடிப்பாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தளபதி 67 படத்தில் லோகேஷ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தன்னுடைய 100 சதவிகித படமாக அமையும் என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.