பொங்கல் ரேஸில் லேட்டஸ்டாக சேரும் கொம்பன்
சென்னை: பொங்கல் பண்டிகை ரேஸில் கார்த்தியின் கொம்பன் படமும் சேர்கிறதாம்.
பண்டிகை என்றால் புதுப்பட ரிலீஸ் இல்லாமலா. இந்நிலையில் தான் பொங்கல் பண்டிகையை குறி வைத்து சில படங்கள் திரைக்கு வர உள்ளன. ரசிகர்களுக்கு விதவிதமான சினி விருந்து காத்திருக்கிறது.
அதன் விவரம் வருமாறு,

என்னை அறிந்தால்
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக உள்ளது.

ஐ
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் உடல் எடையை குறைத்து, கூட்டி வருடக் கணக்கில் நடித்த ஐ படமும் பொங்கல் பண்டிகையை குறி வைத்து ரிலீஸாகிறது.

ஆம்பள
விஷால், ஹன்சிகாவை வைத்து சுந்தர் சி. இயக்கியுள்ள ஆம்பள படமும் பொங்கலுக்கு தான் வருகிறது.

காக்கிச் சட்டை
சிவகார்த்திகேயன் மதிமாறன் ஐ.பி.எஸ்.ஸாக நடித்துள்ள காக்கிச் சட்டையும் பொங்கல் விருந்தாக வருகிறது.

கொம்பன்
பொங்கல் ரேஸில் லேட்டஸ்டாக சேரவிருப்பது கார்த்தியின் கொம்பன். கார்த்தியுடன் லக்ஷ்மி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் பற்றி அவ்வளவாக தகவல்களை வெளிடாமல் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











