#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்

By Siva

Recommended Video

கார்த்தி புதுப்படம் ஆரம்பம் ஆனா ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க!- வீடியோ

சென்னை: கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினே இல்லையாம்.

தேவ் படத்தை அடுத்து கார்த்தி மாநகரம் படம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் வேலைகள் பூஜையுடன் புதன்கிழமை துவங்கியது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் தற்போதைக்கு கார்த்தி 18 என்று அழைக்கப்படுகிறது.

ஹீரோயின்

ஹீரோயின்

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் கார்த்தி 18 படத்தில் ஹீரோயின் இல்லையாம். படம் குறித்து லோகேஷ் கூறியதாவது, இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி உண்டு, ஆனால் அந்த கதாபாத்திரத்தை திரையில் காட்ட மாட்டோம். அதே சமயம் ஹீரோயின் இல்லை என்பதே பார்வையாளர்களுக்கு தெரியாத அளவுக்கு படம் இருக்கும் என்றார்.

நெல்லை

நெல்லை

படத்தில் 70 சதவீதம் ஆக்ஷன் காட்சிகள் இருக்குமாம். படப்பிடிப்பு சென்னை மற்றும் திருநெல்வேலியில் நடக்க உள்ளதாம். நரேன், கலக்கப் போவது யாரு தீனா, ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

எஸ்.ஆர். பிரபு

கார்த்தி படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக எஸ்.ஆர். பிரபு தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தையும் எஸ்.ஆர். பிரபு தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ரசிகர்கள்

லோகேஷ் படத்தில் கார்த்தி நடிப்பதாக எஸ்.ஆர். பிரபு போட்ட ட்வீட்டை பார்த்து ஏனோ சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிங்கிள்

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள தேவ் படத்தின் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X