உங்க படம் எல்லாம் மொக்கை, நான் மெட்ராஸை பார்க்க மாட்டேன்: கார்த்தியிடம் கூறிய சிறுவன்
சென்னை: தனது படங்கள் நன்றாக இருக்காது என தன் நண்பரின் மகன் கூறியதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
பருத்தி வீரன் படம் மூலம் அதிரடியாக ஹீரோவானவர் கார்த்தி. முதல் படத்திலேயே இப்படி ஒரு நடிப்பா என்று அனைவரையும் மிரள வைத்தார். அதன் பிறகு அவர் ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா ஆகிய படங்களில் நடித்தார்.
நீண்ட நாள் கழித்து கார்த்திக்கு வெற்றிப்படமாக அமைந்தது சிறுத்தை.

சகுனி
கார்த்தி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சகுனி படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.

3 படங்கள்
சகுனியை அடுத்து கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி என வரிசையாக அவரது படங்கள் ஏமாற்றத்தை அளித்தன.

மெட்ராஸ்
தொடர் சரிவை சந்தித்த கார்த்திக்கு மெட்ராஸ் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழகிறது.

மொக்கை
எனது படங்கள் நன்றாக இருக்காது என்று கூறி என் நண்பரின் மகன் மெட்ராஸ் படத்தை பார்க்க மறுத்தார். பின்னர் விமர்சனங்களை பார்த்து, ட்விட்டரில் வெளியிடப்பட்ட நல்ல கருத்துகளை பார்த்த பிறகே அவர் படத்தை பார்க்க சென்றார். அவருக்கு படமும் பிடித்துள்ளது என்றார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











