சுல்தானை' அடுத்து ஹீரோ கார்த்தி நடக்கும் படம்.. அறிவித்தது படக்குழு.. பிரம்மாண்ட ஆக்‌ஷனாமே!

By

சென்னை: சுல்தான் படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.

ஜீத்து ஜோசப் இயக்கிய 'தம்பி' படத்தை அடுத்து கார்த்தி நடித்திருக்கும் படம், சுல்தான்.

இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா, இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

சுல்தான் பொங்கல்

சுல்தான் பொங்கல்

இந்தப் படத்தை, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படுகிறது.

பூஜை பாடல்

பூஜை பாடல்

இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதையடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை, பி.எஸ்.மித்ரன் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தீபாவளி நாளான நேற்று இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை மற்றும் பாடல் பதிவு நேற்று நடந்தது.

பிரின்ஸ் பிக்சர்ஸ்

பிரின்ஸ் பிக்சர்ஸ்

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இதற்கு முன், விஷால் நடித்த இரும்புத்திரை, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படங்களை இயக்கியவர். கார்த்தி நடிக்கும் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்
எஸ்.லக்ஷ்மன்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்

பிரம்மாண்ட ஆக்‌ஷன்

பிரம்மாண்ட ஆக்‌ஷன்

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரம்மாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X