அடுத்தடுத்த படங்களால் பிஸியான கார்த்தி...மித்ரனுடன் கைகோர்க்க தயார்

சென்னை : டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான், மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். இதற்கிடையில் இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய டைரக்டர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க போவதாக நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கலாம் என கூறப்படுகிறது. சுல்தான் படத்தின் புரோமோஷன் வேலைகள் முடிந்த பிறகு, இந்த புதிய படத்தின் வேலைகளில் கார்த்தி துவக்க உள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

Karthi’s next with PS Mithran to go on floors in April?

ஆக்ஷன் த்ரில்லர் படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் வேலைகளை ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் கவனிக்க உள்ளார்.

மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். சுவாரஸ்யமான ஆக்ஷன் படமாக இதை எடுக்க உள்ளனர். இதற்கு முன் 2011 ல் வெளியான சிறுத்தை படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

ராஜமவுலி தெலுங்கில் இயக்கிய விக்ரமார்குடு படத்தை தமிழில் ரீமேக் செய்து, டைரக்டர் சிவா சிறுத்தை என்ற பெயரில் இயக்கி இருந்தார். அதனால் கார்த்தி இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படமாக இது அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X