கலக்கலான "புது சத்தம்" பாடல் வெளியானது சுல்தான் படத்தின் அடுத்த அப்டேட்!

சென்னை: சென்னை: கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவுள்ள படம் சுல்தான்.

இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க, விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து புதிய அப்டேட்டை படக்குழு வழங்கியுள்ளது. புது சத்தம் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நூறு தல ராவணன்

நூறு தல ராவணன்

படத்தின் ட்ரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. ஆக்ஷன், லவ் காட்சிகள் நிறைந்த ட்ரைலரில் வசனங்கள் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தது. தன்னை 100 தல ராவணன் என்று கார்த்தி வசனம் சொல்லும் காட்சிகள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது.

நாளை வெளியீடு

நாளை வெளியீடு

நாளை வெளியாகவுள்ள சுல்தான் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை AP International நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளிற்கு கொண்டு வர மாஸ்டர் படத்தை போல சுல்தான் திரைப்படம் அமையும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

வைரலாகும் பாடல்கள்

வைரலாகும் பாடல்கள்

படக்குழு படத்தில் இருந்து மூன்று பாடல்களை முன்னர் வெளியிட்டு இருந்தது. அனிருத் குரலில் 'ஜெய் சுல்தான்', சிம்பு குரலில் 'யாரையும் இவளோ அழகா பார்க்கல' , மற்றும் மற்றொரு பாடலான 'எப்படி இருந்த நாங்க' என மூன்று பாடல்களை வெளியிட்டு இருந்தது. பாடல்களும் தொடர்ந்து வைரலாகி வருகிறது. குறிப்பாக அனிருத் பாடிய ஜெய் சுல்தான் பட்டையை கிளப்பி வருகிறது.

கலக்கலான பாடல்

கலக்கலான பாடல்

சமீபத்தில் ஜெய் சுல்தான் பாடலின் வீடியோ சாங் வெளியானதை தொடர்ந்து படக்குழு "புது சத்தம்" பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது. கைலாஷ் கேர் பாடிய இந்த பாடலை தனிக்கொடி எழுதியுள்ளார். கார்த்தி - ராஷ்மிகா ஆகியோரின் கலக்கலான நடனம் பாடலை மேலும் சிறப்பிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X