சகுனி திரைப்படம் வெளியாகி 9 வருஷமாச்சு.... இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம் !
சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் முடிவடைகிறது.
கார்த்தி, பிரணிதா சுபாஷ், சந்தானம், பிரகாஷ் ராஜ், விஎஸ் ராகவன் பலர் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருப்பார். சங்கர் தயாள் இப்படத்தை இயக்கி இருப்பார்.

சிறப்பான நடிப்பு
அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தி அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகர் என பெயர் எடுத்தார். இப்படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அப்படி அமர்களமான ஒரு திரைப்படத்தில் அறிமுகமான கார்த்தி கைதி, சுல்தான் என அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கிராமத்து இளைஞராக
சகுனி திரைப்படத்தில் ஒரு இயல்பான கிராமத்து இளைஞராக நடித்திருப்பார். பரம்பரை வீட்டை காப்பாற்ற பல வேலைகளையும், அரசியல் சூழ்நிலையையும் மகாபாரதத்தில் சகுனிபோல கனகச்சிதமாக செய்து இருப்பார் கார்த்தி.

நகைச்சுவை
இப்படத்தில் சந்தானத்துடன் கூட்டு சேர்ந்து ரஜினி, கமல் என்ற நகைச்சுவையையும், 'உச்சா' தண்டனைக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் பேசுவது அல்டிமேட் காமெடியாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் வலுவே சந்தானத்தின் அசடு வழியும் காட்சியும் ரசிக்கும் படியாக இருக்கும்.

9 ஆண்டுகள் நிறைவு
இந்நிலையில், சகுனி திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு செய்வதை கார்த்தியின் ரசிகர்கள் இணையத்தில் அப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். மேலும், #9yearsofsaguni என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு அவற்றை டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











