பொன்னியின் செல்வன் பரபரப்புக்கிடையில் கார்த்தியின் சர்தார்.. விரைவில் டீசர் -பாடல் வெளியீடு!
சென்னை : நடிகர் கார்த்தியின் விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் அனைவரின் விருப்பத்திற்குரிய கதாபாத்திரமான வந்தியத் தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரது சர்தார் படமும் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் விருமன் படம் வெளியானது. கிராமத்து கேரக்டரில் இந்தப் படத்தில் கார்த்தி நடித்திருந்தார். முன்னதாக இந்தக் கூட்டணி கொம்பன் படத்திலும் இணைந்திருந்தது.

விருமன் படம்
விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி ஷங்கர் நடித்திருந்தார். இந்தப் படத்தின்மூலம் அவர் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். மேலும் படத்தில் ஒரு பாடலையும் பாடி தன்னை பாடகியாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் படத்தில் சூரி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கார்த்தியின் பொன்னியின் செல்வன் படம் நாளை மறுநாள் ரிலீசாக உள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்தப் படத்தின் புக்கிங்குகளும் அதிகமாக விற்றுத் தீர்ந்துள்ளன.

பிரமோஷனல் டூர்
இதனிடையே இந்தப் படத்திற்காக படத்தில் நடித்துள்ள ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்களும் கார்த்தியும் இணைந்து சென்னை முதல் டெல்லி வரை 10 நாட்கள் பிரமோஷனல் டூரை மேற்கொண்டிருந்தார். சென்ற இடங்களில் எல்லாம் இந்த டீமிற்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருந்தனர்.

சர்தார் படம்
இதனிடையே கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் படமும் அடுத்ததாக ரிலீசாக உள்ளது. தீபாவளியையொட்டி இந்தப்படம் ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடலை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தியத்தேவன் கேரக்டர்
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற கேரக்டரில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்தக் கேரக்டரில் முன்னதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் கமிட்டாகியிருந்தனர். பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.


Click it and Unblock the Notifications











