விக்ரம், பொன்னியின் செல்வனை தொடர்ந்து அதிரடி பிரமோஷனில் சர்தார் படம்.. அட இப்படிகூட பண்ணலாமா!
சென்னை : நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் சர்தார் படம் வரும் அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் பிரமோஷன்களில் தற்போது கார்த்தி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி அடுத்ததாக வெளியான சுல்தான் படங்களை தொடர்ந்து கடந்த இரு மாதங்களில் அவரது விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

விருமன் படம்
குறிப்பாக சூர்யா தயாரிப்பில் வெளியான விருமன் படத்தில் தன்னுடைய எவர்கிரீன் லுக்கான கிராமத்து கெட்டப்பில் அதிரடி கிளப்பியிருந்தார் கார்த்தி. இந்தப் படத்தில் குடும்ப உறவுகளை அரவணைத்து செல்லும் கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு அதீதி ஷங்கர் ஜோடியாகியிருந்த நிலையில், இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வந்தியத்தேவன் கேரக்டர்
தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது வந்தியத்தேவன் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் அவரது இயல்பான கேரக்டர் படத்தின் வெற்றிக்கு மிகவும் சிறப்பாக துணை புரிந்தது. தற்போது இந்தப் படம் சர்வதேச அளவில் 400 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

சர்தார் படத்திற்கு எதிர்பார்ப்பு
இந்தப் படங்களின் தொடர் வெற்றி கார்த்தியின் அடுத்தப் படமான சர்தார் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ள நிலையில், வரும் 21ம் தேதி தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தின் பிரமோஷனை படக்குழு துவக்கியுள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்
விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் அதிரிபுதிரி வெற்றிக்கு அதன் பிரமோஷனும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், அதே பாலிசியை கார்த்தியின் சர்தார் படமும் பின்பற்றி வருகிறது. சமூக வலைதளங்களில் கார்த்தி மற்றும் படத்தின் நாயகி ராஷி கண்ணா தொடர் பேட்டிகளை அளித்து வருகின்றனர்.

பாட்டில்களில் சர்தார் போஸ்டர்கள்
இதை தொடர்ந்து பாட்டில்களில் சர்தார் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதேபோல ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய இடங்களில் படத்தின் பேனர்கள் ஓட்டப்பட்டு சிறப்பாக பிரமோட் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் ட்ரெயிலர்
இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் கார்த்தி பாடியுள்ள ஏறுமயிலேறி பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவையும் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











