Don't Miss!
- Technology
வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா! இந்த Phone தான் பெஸ்ட் சாய்ஸ்!
- Sports
"சூர்யகுமார் ஒன்றும் அவ்வளவு பெரிய வீரர் இல்லை".. பாக். முன்னாள் வீரர் தாக்கு.. காரணம் பாண்டிங் தான்
- Lifestyle
உங்க கண்களில் இந்த மாதிரி அறிகுறி இருந்தா... அது மாரடைப்பை ஏற்படுத்தும் பிபியோட அறிகுறியாம்..!
- News
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
- Finance
ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களை பந்தாடும் விலைவாசி உயர்வு..!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
அசர்பைசான் நாடாளுமன்றத்தில் கார்த்தியோட சர்தார் சூட்டிங்.. வில்லன் போர்ஷனுக்கு இவ்வளவு கோடி செலவா?
சென்னை : நடிகர் கார்த்தி இயக்குநர்களின் செல்லப் பிள்ளையாக உள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சிறப்பாக ஓடி வருகின்றன.
லோகேஷ் கனகராஜின் கைதி, ஹெச் வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்கள் இதற்கு சாட்சி.
தற்போது இவரது நடிப்பில் அடுத்தடுத்து விருமன், சர்தார் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன.
நேஷ்னல்
கிரஷ்ன்னு
ஒண்ணும்
சும்மா
சொல்லல..
ரசிகருக்காக
ராஷ்மிகா
மந்தனா
என்ன
பண்ணாரு
தெரியுமா?

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார். சாக்லேட் பாய் கேரக்டரில் நடித்தாலும் இவருக்கு சிறப்பாக இருக்கிறது. கைதி படத்தில் மிரட்டலான தோற்றத்திலும் நடித்திருந்தார். தீரன் அதிகாரம் ஒன்று போன்ற போலீஸ் படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

விருமன் படம்
இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் அத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் முத்தையா இயக்கத்தில் விருமன் படம் ஆகஸ்ட் 31ம் தேதியும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வம் படம் செப்டம்பர் 30ம் தேதியும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

சர்தார் படம்
கடைசியாக இவரது நடிப்பில் சுல்தான் படம் வெளியான நிலையில், கொரோனா காரணமாக இவரது படங்கள் லாக் ஆகியுள்ளன. இந்நிலையில் தற்போது மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் சர்தார் படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அசர்பைசான் நாடாளுமன்றத்தில் சூட்டிங்
சர்தார் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளுக்காக படக்குழு அசர்பைசான் சென்றனர். அங்கு நாடாளுமன்றத்தில் இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

வில்லன் காட்சிகளுக்காக ரூ.4 கோடி
வில்லன் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகளுக்காக மட்டும் 4 கோடி ரூபாயை சர்தார் படக்குழு செலவிட்டுள்ளதாம். இதுவரை ஷூட்டிங் நடத்தப்படாத அசர்பைசான் நாடாளுமன்றத்தில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. எஸ் லஷ்மன் குமார், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். கார்த்தி நடித்த படங்களிலேயே மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் இது என கூறப்படுகிறது.

ஜியார்ஜியாவிலும் சூட்டிங்
மேலும் ஜார்ஜியாவிலும் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது சென்னையில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் கார்த்திக்கு ராஷி கண்ணா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி ரிலீஸ்
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24 திங்கட்கிழமையில் வருவதால், சர்தார் படம் முன்னதாகவே திரையரங்குகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட்டில் விருமன், செப்டம்பரில் பொன்னியின் செல்வன் மற்றும் அக்டோபரில் சர்தார் என அடுத்தடுத்த மாதங்களில் கார்த்தி படங்கள் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.