சர்தார் படத்தில் ரெட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி... காட்டுப்பகுதிகளில் சூட்டிங் நடத்த திட்டம்!

சென்னை : நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரபல இயக்குநர் மித்ரனுடன் முதல் முறையாக நடிகர் கார்த்தி இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை பிரம்மாண்டமாக எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எந்தவிதமான கேரக்டரிலும் தன்னை சிறப்பாக பொருத்திக் கொள்ளும் கார்த்தி தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து அனைத்து படங்களையும் வெற்றிப்படமாக்கி வருகிறார். பருத்தி வீரனில் துவங்கிய இவரது சினிமா பயணம் தற்போது கடைக்குட்டி சிங்கம், தேவ், தம்பி என நீண்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் உருவாகி வருகின்றன. விரைவில் இந்தப் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மித்ரனுடன் கூட்டணி

மித்ரனுடன் கூட்டணி

இதனிடையே முதல்முறையாக டைரக்டர் மித்ரனுடன் கார்த்தி கூட்டணி அமைத்துள்ள சர்தார் படத்தின் சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கில் கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கார்த்தி இரட்டை வேடங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

காட்டுப்பகுதிகளில் சூட்டிங்

காட்டுப்பகுதிகளில் சூட்டிங்

இந்நிலையில் சென்னையை அடுத்து தொடர்ந்து கொடைக்கானலின் காட்டுப்பகுதிகளிலும் மைசூர் காட்டுப்பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் ஸ்டண்ட் காட்சிகளை பிரம்மாண்டமாக எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஆஹா

டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஆஹா

இந்தப் படத்தின் சூட்டிங் முடியும் முன்னதாக படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாகியுள்ளார் ராஷி கண்ணா. மேலும் படத்தில் சிம்ரன், ஜங்கி பாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசை

படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லஷ்மன்குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துவரும் கார்த்தியின் நடிப்பில் இந்தப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X