அஜித் படத்தோட இந்தப் படங்கள் தீபாவளி பந்தயத்துல மோதவிருக்கா... அப்ப சூப்பர் விருந்து காத்திருக்கு!

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிவரும் ஏகே61 படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் வரும் தீபாவளியில் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் முன்னதாகவே அறிவித்துள்ளார். இதையொட்டி படத்தின் சூட்டிங் விரைவு படுத்தப்பட்டுள்ளது.

ஏகே 61 படம்

ஏகே 61 படம்

நடிகர் அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகி வருகிறது ஏகே61. முன்னதாக இதே காம்பினேஷனில் உருவான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கவில்லை. ஆயினும் வசூல் சாதனை புரிந்துள்ளன. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் ஏகே61 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சிறப்பான படங்களை கொடுத்துள்ள ஹெச் வினோத் அது போன்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் அஜித்தை இந்தப் படத்தில் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அஜித்துடன் அவரது 3வது படம் என்பதால் அவர் இந்தப் படத்தில் தன்னுடைய பெஸ்ட்டை கொடுக்க முற்படுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

இந்தப் படத்தை தீபாவளியையொட்டி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டு அறிவித்தும்விட்டார். இதையடுத்து படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்காக ஐதராபாத்தில் மவுண்ட் ரோடு செட் மற்றும் பேங்க் செட் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.

அஜித் பிறந்தநாளில் அறிவிப்பு

அஜித் பிறந்தநாளில் அறிவிப்பு

படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட தேர்வுகள் இன்னும் முழுமையடையவில்லை. இந்நிலையில் நாளைய தினம் அஜித்தின் பிறந்தநாளையொட்டி, இந்தப் படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் மற்றும் ஹீரோயின் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

சர்தார், அயலானுடன் மோதும் ஏகே61

சர்தார், அயலானுடன் மோதும் ஏகே61

தீபாவளி பந்தயத்தில் ஏகே61 படம் இணைவது உறுதியாகியுள்ள நிலையில், இந்தப் படத்துடன் கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் ஆகிய படங்களும் மோதவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த இரு படங்களும் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

சிஜி வேலைகள் முடக்கம்

சிஜி வேலைகள் முடக்கம்

குறிப்பாக அயலான் படம் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது. நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சிஜி வேலைகள் முடங்கியுள்ளதே ரிலீஸ் தள்ளிப் போவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X