பின்னடைவில் பிரின்ஸ்... சாதித்த சர்தார்... சபாஷ் கார்த்தி... தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் 21ம் தேதி பிரின்ஸ், சர்தார் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.

பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் தீபாவளி ரிலீஸ் என்ற நிலையில், அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஆனால், தீபாவளி ரிலீஸில் சத்தமே இல்லாமல் சாதனை படைத்துள்ளது கார்த்தியின் சர்தார் திரைப்படம்.

பிரின்ஸ் Vs சர்தார்

பிரின்ஸ் Vs சர்தார்

இந்தாண்டு தீபாவளி வெளியீடாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியானது. கடந்த வாரம் 21ம் தேதி வெளியான இந்தப் படங்களில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கே முதலில் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஹாலிவுட் நடிகை மரியா உள்ளிட்ட பலர் பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தனர். ஆனால், தீபாவளி ரேஸில் முதல் நாளிலேயே ஆட்டம் தலை கீழாகிப் போனது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரின்ஸ் படத்தை விடவும், கார்த்தியின் சர்தார் மாஸ் காட்டியது.

100 கோடியை நெருங்கும் சர்தார்

100 கோடியை நெருங்கும் சர்தார்

கார்த்தியின் சர்தார் விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பால், பாக்ஸ் ஆபிஸில் சூப்பரான கலெக்‌ஷன் கிடைத்தது. முதல் நாளில் 5 கோடி மட்டுமே வசூலித்த சர்தார், அடுத்தடுத்த தினங்களில் கலெக்‌ஷனில் தனிக்காட்டு ராஜாவாக விஸ்வரூபமெடுத்தது. ரிலீஸான 21ம் தேதி முதல், தீபாவளி விடுமுறை தினம் வரை 5 தினங்களில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலித்தது. அதன்பின்னரும் கூட தொடர்ந்து சர்தார் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பால், இப்போது 75 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இந்த வாரத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் அதிகரித்து வருவதால், விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு

தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு

சர்தார் திரைப்படம் முதல் வாரம் தமிழ்நாட்டில் மொத்தமே 380 திரைகளில் மட்டும் திரையிடப்பட்டது. சர்தாரை விட பிரின்ஸ் படத்துக்கு அதிகம் ஸ்கீரின்கள் கிடைத்திருந்தன. இந்நிலையில், தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் முதல் நாளோடு முடங்கிவிட்டதால், கார்த்தியின் சர்தார் அடித்து தூள் கிளப்பி வருகிறது. இதனால், 380 திரைகளில் மட்டும் ஓடிவந்த சர்தார், இப்போது கூடுதலாக 120 திரைகளில் திரையிடப்படுகிறது. அதனால், இரண்டாவது வாரத்தில் மொத்தம் 500 திரைகளில் சர்தார் திரையிடப்படுகிறது. இது கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

கார்த்தியின் ஹாட்ரிக் ஹிட்

கார்த்தியின் ஹாட்ரிக் ஹிட்

பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார் படத்தில், கார்த்தியுடன் லைலா, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கார்த்தி ரா அதிகாரியாகவும் போலீஸாகவும் நடித்துள்ளார். தண்ணீர் அரசியலை பின்னணியாக வைத்து ஆக்‌ஷன் ட்ரீட் கொடுத்துள்ள சர்தார், கார்த்திக்கு ஹாட்ரிக் கொடுத்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து சர்தார் படத்தையும் ஹிட் கொடுத்து இந்தாண்டு பாக்ஸ் ஆபிஸில் டாப்பில் இருக்கிறார் கார்த்தி. அதுமட்டும் இல்லாமல் சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X