ஷுட்டிங்கே முடியல...லாபத்தை அள்ளும் கார்த்தியின் சர்தார்...அப்படி என்ன பண்ணிருக்காங்க?
சென்னை : கார்த்தி நடிக்கும் சர்தார் படம் ஷுட்டிங் முடிவதற்கு முன்பே கோடிக் கணக்கில் லாபம் அள்ளி வருகிறது. இதனால் ரிலீஸ் தேதியை உறுதி செய்வதற்கு முன்பே போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள் என சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
டைரக்டர் பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கி வரும் ஸ்பை க்ரைம் த்ரில்லர் படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் லட்சுமண் குமார் தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராஷி கன்னா, ராஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சுன்கி பாண்டே இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.

பாதியில் நிறுத்தப்பட்ட ஷுட்டிங்
2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்தார் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் கட்ட ஷுட்டிங் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. இரண்டு நாட்கள் மட்டுமே ஷுட்டிங் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஷுட்டிங் நிறுத்தப்பட்டது. பிறகு அவுட்டோர் ஷுட்டிங் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் 2 கோடியில் செட் அமைத்து அதில் ஷுட்டிங்கை நடத்தினர்.

கார்த்திக்காக காத்திருந்த சர்தார்
பிறகு பொன்னியின் செல்வன் ஷுட்டிங்கில் கார்த்தி பிஸியானதால், சர்தார் பட வேலையில் பாதியில் நின்றது. நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட ஷுட்டிங் சமீபத்தில் தான் மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இறுதிக்கட்டமாக ஸ்டன்ட் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சர்தார் பட ஸ்டில்கள் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

கார்த்திக்கு செம மவுசு
சிறுத்தை படத்திற்கு பிறகு கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒன்று வயதான கேரக்டர். மற்றொன்று போலீஸ் ரோல். கடைகுட்டி சிங்கம், கைதி படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிக்கும் படங்களுக்கு மார்க்கெட்டில் மவுசு கூடி வருகிறது. அதுவும் தற்போது பொன்னியின் செல்வனில் மிக முக்கியமான வந்தியத்தேவன் படத்தில் நடிப்பது, அடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் விருமன் ஆகியன கார்த்தி படங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

அதுக்குள்ள இத்தனை கோடி லாபமா
இதனால் ஷுட்டிங் முடிவதற்கு முன்பே சர்தார் படத்தின் ஓடிடி உரிமத்தை ரூ.20 கோடிக்கு ஆஹா தளம் வாங்கி உள்ளது. சர்தார் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு ஆஹா தமிழ் தளத்தில் தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். இதனால் ரிலீசுக்கு முன்பே சர்தார் படம் போட்ட முதலீட்டை பணத்தை எடுத்து விடும் என சொல்லப்படுகிறது. டிஜிட்டல் உரிமமே 20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்பதால் இன்னும் சேட்டிலைட் உரிமம், இந்தி டப்பிங் உரிமம் ஆகியன மிதமுள்ளதால், இவை பல கோடிகளை லாபம் பார்க்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











