பொங்கல் ரேஸில் இல்லையாம்.. கார்த்தியின் சுல்தான் ரிலீஸ் ஏப்ரலுக்கு தள்ளிப்போகிறது..

By

சென்னை: கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கார்த்தி இப்போது நடித்து முடித்துள்ள படம் சுல்தான். இதை ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

கார்த்தி ஜோடியாக, தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

விவேக் - மெர்வின்

விவேக் - மெர்வின்

இவர் தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் தமிழில் நேரடியாக அறிமுகமாகும் படம் இது. ட்ரீம் வாரியர் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. விவேக் - மெர்வின் இசை அமைக்கின்றனர். இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.

பெரிய தயாரிப்பு

பெரிய தயாரிப்பு

அப்போது, 'ஷூட்டிங் முடிந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன் இந்த கதையின் ஐடியாவை கேட்ட நாளில் இருந்தே, இந்த கதை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனது பெரிய தயாரிப்புகளில் இதுவும் ஒன்று என்று கூறியிருந்தார் கார்த்தி.

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

இதற்கிடையே, சூர்யாவின் சூரரைப் போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின் உட்பட பல படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வந்தன. ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கலுக்கு ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இந்நிலையில் சுல்தான் படத்தை பொங்கலுக்கு தியேட்டரில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்கி விட்டதால் சுல்தான் படமும் ஓ.டி.டியில் வருகிறது என்று தகவல் பரவியது. இதனை படக்குழு மறுத்துள்ளது. சுல்தான் படம் ரிலீசை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X