முதல்ல அண்ணன் படம்... அப்புறம்தான் தம்பி... மே மாதம் ரிலீஸ் ஆகிறது கார்த்தியின் சுல்தான்

By

சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸுக்கு பிறகு கார்த்தியின் சுல்தான் படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு முடிவு செய்துள்ளது.

ஏர் டெக்கான் விமான நிறுவனரான பெங்களூரைச் சேர்ந்த் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.

இதில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார். 'துரோகி', 'இறுதிச் சுற்று' படங்களை இயக்கிய சுதா கொங்கரா இதை இயக்கியுள்ளார்.

2டி என்டர்டெயின்மென்ட்

2டி என்டர்டெயின்மென்ட்

இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

விமான வாடகை

விமான வாடகை

விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இந்த விமானத்துக்கு ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.47 லட்சமாம். 15 நாள் இதில் ஷூட்டிங் நடந்ததால் பட்ஜெட் அதிகமானது என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் ரிலீஸ்

ஏப்ரல் ரிலீஸ்

இந்தப் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. பொங்கலுக்கு ரஜினி படம் ரிலீஸ் ஆனதால் அப்போது இது ரிலீஸ் ஆகவில்லை. இதன் ரிலீசை படக்குழு ஏப்ரல் மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளது. இந்தப் படத்தை அடுத்து கார்த்தியின் சுல்தான் படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

ராஷ்மி மந்தனா

ராஷ்மி மந்தனா

கார்த்தியின் சுல்தான் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். இதில் ராஷ்மி மந்தனா ஹீரோயின். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X