எப்படி இருந்த நாங்க...கார்த்தியின் சுல்தான் 3வது சிங்கிள் டிராக் பாடல் வெளியீடு
சென்னை : டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் சுல்தான். இந்த படம் வரும் ஏப்ரல் 2 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் முதல் இரண்டு சிங்கிள் டிராக் பாடல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது. அதிலும் கடந்த வாரம் வெளியிடப்பட்ட, யாரையும் இவ்ளோ அழகா பாக்கல என்ற பாடல் வெளியிடப்பட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் பார்வைகளை அள்ளியது.

இந்த பாடலை சிம்பு பாடி இருந்தார். இந்த மெலடி பாலை சிறப்பானதாக கொண்டு வர சிம்பு எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு நன்றி என கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவிற்கு நன்றி சொல்லி இருந்தார்.
இந்நிலையில் படத்தின் 3வது சிங்கிள் டிராக் பாடலை ட்ரீம் வாரியஸ் நிறுவனம், யூட்யூப் உள்ளிட்ட தளங்களில் வெளியிட்டுள்ளது. எப்படி இருந்த நாங்க என துவங்கும் இந்த பாடலை ஆன்டனி தாசன் பாடி உள்ளார். இந்த பாடலை யூட்யூப்பில் வெளியிட்ட 5 நிமிடத்தில் 2000 பேர் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











