சிவகார்த்திகேயன் வாழ்த்து.. ரசிகர்களுடன் படம் பார்த்த கார்த்தி.. தெறிக்கும் சுல்தான் FDFS!

சென்னை: நடிகர் கார்த்தியின் சுல்தான் படம் இன்று வெளியாகி உள்ளது. அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கார்த்தி ரசிகர்கள் தியேட்டர்களை தெறிக்கவிட்டு கொண்டாடி உள்ளனர்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு டல் அடித்த திரையரங்குகள் ஏப்ரல் மாதம் தொடங்கி உள்ள நிலையில், சுல்தான் படம் மூலம் தங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளன.

தொடர்ந்து ஏகப்பட்ட பெரிய படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், மீண்டும் தியேட்டர் தொழில் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுல்தான் ரிலீஸ்

சுல்தான் ரிலீஸ்

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, லால், கேஜிஎஃப் வில்லன் ராமசந்திர ராஜு, நெப்போலியன், சதீஷ், யோகி பாபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள சுல்தான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் சுல்தான் முதல் காட்சி கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர்.

தியேட்டருக்கு வந்த கார்த்தி

சுல்தான் படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடன் பார்க்க சென்னையில் உள்ள பிரபல தியேட்டருக்கு இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுடன் வந்த நடிகர் கார்த்திக் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து மகிழ்ந்தார். மேலும், தியேட்டருக்கு மார்க் போட வராதீங்க, என்ஜாய் பண்ண வாங்க என நடிகர் கார்த்தி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

மாஸ் ஓப்பனிங்

ஆக்‌ஷன் பேக்ட் மசாரா படமாக வெளியாகி உள்ளது கார்த்தியின் சுல்தான் திரைப்படம். சிறுத்தை படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக்கு அப்படியொரு படமாக சுல்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் வில்லனுடன் மோதும் சண்டை காட்சிகள் எல்லாம் தியேட்டரில் தெறிப்பதாக கருத்துக்கள் பரவி வருகின்றன.

அலைமோதும் கூட்டம்

பக்கா கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமாக அமைந்துள்ள சுல்தான் படத்தை பார்க்க முதல் காட்சிக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

ரெமோவை விட மிகப்பெரிய வெற்றியை சுல்தான் படம் அடைய வேண்டும் என இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் நடிகர் கார்த்திக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ரெமோ படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக பாக்கியராஜ் கண்ணன் அறிமுகமானார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X