ஜெய் சுல்தான்.. அனிருத் குரலில் தர லோக்கல் கானா பாடல்.. வெளியானது சுல்தான் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
சென்னை: ரெமோ படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த படமான சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.
அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குனா இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

5 வருஷம் கழிச்சு
சிவகார்த்திகேயனின் ரெமோ படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. அந்த படம் வெளியாகி சுமார் 5 வருஷம் கழிச்சு இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த படமான சுல்தான் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. கடந்த ஆண்டே ரிலீசாக வேண்டிய இந்த படமும் கொரோனா காரணமாக தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ராஷ்மிகா
டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டில் கலக்கி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக பாலிவுட்டிலும் நடிக்க கிளம்பி விட்டார். இந்நிலையில், தமிழில் நடிகர் கார்த்தி உடன் சுல்தான் படத்தில் அவர் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நேஷ்னல் க்ரஷ் என சமீபத்தில் தேசிய அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது.
ஜெய் சுல்தான்
வரும் ஏப்ரல் மாதம் சுல்தான் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், பட புரமோஷன் வேலைகளை படக்குழு தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான சுல்தான் பட டீசரும் வேற லெவலில் ஹிட் ஆனது. இந்நிலையில், தற்போது ஜெய் சுல்தான் எனும் தர லோக்கல் கானா பாடல் வெளியாகி உள்ளது.

அனிருத் வாய்ஸ்
விவேக் மெர்வின் இசையில் உருவாகி உள்ள சுல்தான் படத்தின் இன்ட்ரோ பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி கொடுத்துள்ளார். தப்பாட்ட கலைஞர்களின் இசை, கானா பாடகர்களான ஜூனியர் நித்யா மற்றும் கானா குணாவுடன் இணைந்து வெறித்தனமாக பாடி உள்ளார் அனிருத்.

ஏ சுள்ளான் வா சுள்ளான்
ஜெய் சுல்தான் எனும் பாடலின் ஆரம்ப டோன் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் படத்தில் இடம்பெற்ற ஏ சுள்ளான் வா சுள்ளான் பாடல் இசை போலவே இருப்பதாக சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுக்களையும் எழுப்பி வருகின்றனர். சுல்தான் டீசரும் மாஸ்டர் படத்தின் காட்சிகளை போலவே இருந்ததாகவும் முன்னதாக போட்டோ கம்பேரிசன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











