சாட்டை எடுத்து.. நாட்டை திருத்த போகிறாரா கார்த்தி? வெளியானது ’சுல்தான்’ பட மாஸ் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, மீண்டும் சினிமா உலகம் புத்துணர்ச்சியோடு ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருவதை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
சூர்யாவின் சூரரைப் போற்று டிரைலர், சிம்புவின் ஈஸ்வரன் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது நடிகர் கார்த்தியின் சுல்தான் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்னன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

ரெமோ
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன். முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை பிடித்த பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இரண்டாவது படமாக சுல்தான் உருவாகி உள்ளது.

ராஷ்மிகா தான் ஹீரோயின்
விஜய தேவரகொண்டா, மகேஷ் பாபு என தெலுங்கில் கொடி கட்டிப் பறந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க உள்ளார் என ரூமர்கள் கிளம்பின. ஆனால், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ளார்.

சுல்தான் ஃபர்ஸ்ட் லுக்
வெற்றியை தரும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. கையில் சாட்டையுடன் செம மாஸாக கார்த்தி நிற்பதை பார்க்கவே வெறித்தனமாக இருக்கிறது.

ஒரு வருஷம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த கைதி படம் நேற்றுடன் வெளியாகி ஒரு வருஷத்தை நிறைவு செய்துள்ளது. பிகில் மற்றும் கைதி ஹாஷ்டேக்குகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து, அந்த படங்கள் தொடர்பான ஹைலைட்டுகளை பதிவிட்டு வந்தனர்.

எப்போ ரிலீஸ்
ரெமோ படத்திற்கு பிறகு மிகப் பெரிய கேப்புக்கும் பிறகு இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படம் உருவாகி இருக்கிறது. இந்த ஆண்டு சம்மரில் வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தாமதம் ஆனது. ஃபர்ஸ்ட் லுக்கில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. வரும் பொங்கலுக்கு தியேட்டரில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெகா பட்ஜெட் படம்
சுல்தான் படம் விரைவிலேயே ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்து நடித்து வரும் பிரம்மாண்டமான மெகா பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் படத்திற்காகவும் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











