சுல்தானையும் சும்மா விடல.. முதல் ஷோ முடிந்த கையோடு பைரசி தளங்களில் படு வைரல் பதிவிறக்கம்!
சென்னை: தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி தளங்களில் சுல்தான் படம் கசிந்து வைரலாக டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது.
கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள சுல்தான் திரைப்படத்தின் திருட்டு பிரின்ட் சுடச் சுட பைரஸி வெப்சைட்களில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தியேட்டரில் வெளியாகும் படங்களுக்கு ஆன்லைன் பைரசி மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.

பாசிட்டிவ் விமர்சனம்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் தான் சுல்தான். அதிரடி, ஆக்ஷன் கமர்ஷியல் படமாக வெளியாகி உள்ள சுல்தான் படத்திற்கு அதிகளவிலான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளன.

தியேட்டர்களில் திருவிழா
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தியேட்டர்களில் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ள படமாக நடிகர் கார்த்தியின் சுல்தான் படம் அமைந்துள்ளதாக படத்தை பார்த்த மக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து இன்னொரு சிறுத்தை படம் போல நடிகர் கார்த்திக்கு இந்த படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுல்தானையும் சும்மா விடல
தியேட்டரில் வெளியானாலும், ஒடிடி தளங்களில் வெளியானாலும் அடுத்த கணமே திருட்டு வெப்சைட்களில் திருட்டுத்தனமாக படங்கள் கசிந்து அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. இன்று வெளியாகி உள்ள கார்த்தியின் சுல்தான் படத்தையும் பைரஸி வெப்சைட்கள் சும்மா விடல. தற்போது ஏகப்பட்ட பைரஸி தளங்களில் சுல்தான் டவுன்லோடு சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

டெலிகிராமிலும் லீக்
வாட்ஸப் போன்றே இயங்கும் செயலியான டெலிகிராமிலும் ஏகப்பட்ட புதிய படங்களின் திருட்டு பிரின்ட்கள் லீக்காகி வருகின்றன. இளைஞர்கள் தங்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்களிலேயே அதனை டவுன்லோடு செய்து படத்தை பார்த்து விடுகின்றனர். இதனால், தியேட்டருக்கு வரும் கூட்டம் இயல்பாகவே குறைவது வாடிக்கையாகி வருகிறது.
Recommended Video

ரசிகர்கள் கையில்
தமிழ்ராக்கர்ஸ், தமிழ் எம்.வி, டெலிகிராம், குட்டி மூவிஸ், இசை மினி என ஏகப்பட்ட பைரஸி தளங்கள் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கும் படங்களை திருட்டுத் தனமாக வெளியிட்டு ஏகப்பட்ட தயாரிப்பாளர்களை போண்டியாக்கி வருகின்றன. இதனை தடுப்பது தொழில்நுட்ப ரீதியாக சவாலாகவே இருந்தாலும், நல்ல படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கும் ரசிகர்களால் மட்டுமே சினிமாவை காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











