மகாபாரதத்தை ஒரு முறை போர் இல்லாமல் படிச்சுப் பாருங்க சார்.. தெறிக்கவிடும் சுல்தான் டீசர்!
சென்னை: கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான கார்த்தி, கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜோதிகாவுக்கு தம்பியாக தம்பி என்ற படத்தில் நடித்தார்.
அதன் பிறகு அவரது நடிப்பில் எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

ட்ரீம் வாரியர்ஸ்
இதில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சுல்தான் படத்தை ரெமோ படத்தை இயக்கிய, பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். சுல்தான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்
மேலும் இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். 2019 ஆம் ஆண்டே சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

சுல்தான் டீசர்
தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே படத்தின் டீசர் நேற்று வெளியானது. மகாபாரதத்தை படித்துள்ளீர்களா என்ற கேள்வியுடன் தொடங்குகிறது டீசர்.

போர் இல்லாம படிச்சு பாருங்க
கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையே நடைபெற்ற போரை குறிப்பிட்டு பேசுவதாக உள்ளது. தொடர்ந்து பேசும் கார்த்தி, மகாபாரதத்துல கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம் நின்னார். அதே கிருஷ்ணன் கவுரவர்கள் பக்கம் நின்னுருந்தா? என்று கேட்கும் கார்த்தி, மகாபாரதத்தை ஒரு முறை போர் இல்லாம படிச்சு பாருங்க சார் என்று கூறி முடிக்கிறார்.

குவியும் வியூஸ்
இப்படியாக உள்ளது சுல்தான் படத்தின் டீசர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுல்தான் டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.

ஏப்ரல் 2ல் ரிலீஸ்
சுல்தான் திரைப்படம் முதலில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது திரையரங்க வெளியீட்டுக்கு மாறியுள்ளதாகவும், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீசாகும் எனவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











