கார்த்தியின் சுல்தான்... புதிய ரொமான்டிக் ப்ரோமோ டீசர் வெளியீடு
சென்னை : கார்த்தி நடித்த சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி தியேட்டரில் ரிலீசாக உள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகும் பெரிய நடிகரின் படம் இது என்பதால், பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை அள்ளும் என தியேட்டர் உரிமையாளர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
படம் ரீலீசாவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் புதிய ப்ரோமோ டீசர் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சிம்புவின் குரலில் உருவான, யாரை இவளோ அழகா பாக்கல என்ற ரொமான்டிக் பாடல் தான் டீசராக வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த பாடலின் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கார்த்தி - ராஷ்மிகா இடையேயான ரொமான்ஸ் காட்சிகளுடன் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ பாடலும் யூட்யூப்பில் ரசிகர்களின் ஆதரவை அள்ளி குவித்து வருகிறது.
ராஷ்மிகாவின் முதல் தமிழ் படம் இது என்பதால், இதில் கார்த்தி - ராஷ்மிகா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தால் நிச்சயம் பாக்ஸ் ஆபீசில் படம் மிகப் பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ராஷ்மிகாவிற்கு தமிழில் நல்ல துவக்கமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











