நேத்து ஃபர்ஸ்ட் லுக்.. இன்னைக்கு டீசர்.. ’தம்பி’க்கு ஏன் இவ்ளோ அவசரம்?
Recommended Video
சென்னை: பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்தியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'தம்பி' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
நேற்று 'தம்பி' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது 'தம்பி' படத்தின் டீசரை நடிகர் சூர்யா மற்றும் மோகன் லால் வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் தொங்கா என்ற தலைப்பில் வெளியாகவுள்ள தம்பி டீசரை நாகர்ஜுனா வெளியிட்டுள்ளார்.
பிளாக்பஸ்டர்
தீபாவளி விருந்தாக வெளியான கார்த்தியின் கைதி படம் 100 கோடி வசூலை தாண்டி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த கைதி படத்தில் ஹீரோயின் மற்றும் பாடல்கள் இன்றி வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்தது.
ஏன் அவசரம்?
வயாகாம் 18 தயாரிப்பில் பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'தம்பி' படம் எப்பவோ ரெடியாகி விட்டதாம். ‘தம்பி' படத்தை ரிலீஸ் செய்ய கொஞ்சம் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், படம் வெளியாக தாமதம் ஆகியுள்ளது. கைதியின் வெற்றி, ‘தம்பி' படத்தின் ரிலீஸ் கதவை திறந்து வைத்துள்ளதால், வரும் டிசம்பர் மாதமே படம் திரைக்கு வருகிறது.
டீசர் எப்படி இருக்கு?
டீசரின் ஆரம்பத்தில் நீண்ட முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் பிளேபாயாக கார்த்தி வருகிறார். தம்பி எப்போ வருவான் என சத்யராஜிடம் ஜோதிகா கேட்க, ஸ்மார்ட் லுக்குக்கு மாறும் கார்த்தி பக்காவாக சண்டையிடும் ஆக்ஷன் காட்சி அரங்கேறுகிறது.
"அன்பு எல்லாத்தையும் மாத்தும் சரவணா, உன்னையும் மாத்தி இருக்கு" என ஜோதிகா சொல்லும் வசனத்தை வைத்து பார்த்தால், கார்த்தி இந்த படத்தில் சரவணா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது புரிகிறது. கைதி டில்லிக்கு சரியான போட்டியாக சரவணன் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்தது
அக்டோபரில் கைதி, டிசம்பரில் தம்பி என அடுத்தடுத்து படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்தி ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் சுல்தானாக கலக்கவுள்ளார். ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக, பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியை காணலாம்.


Click it and Unblock the Notifications











