கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' - கல்லா கட்டி கரையேறுமா?

By Shankar

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து (2004) படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி.

முழுமையான கதாநாயகனாக அமீர் இயக்கிய "பருத்தி வீரன்" (2007)இவரை அடையாளம் காட்டியது. பெரும் வெற்றி பெற்ற பருத்தி வீரன் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் பாராட்டுக்களைப் பெற்றாலும், தயாரிப்பாளரை காணாமல் போக வைத்தது.

Karthi's Theeran Athikaram Ondru releasing today

கார்த்தி அவ்வளவுதான் என கூறப்பட்ட சூழலில் 2010 ல் பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை படங்கள் வெளிவந்தன.

மூன்று படங்களுமே பெரும் வெற்றி பெற்றதன் மூலம் ஆக்க்ஷன் ஹீரோவான அங்கீகாரத்துடன் மினிமம் கேரண்டி ஹீரோவாக கார்த்தி வியாபார வட்டாரங்களில் பேசப்பட்டார்.

2011ல் வெளியான கோ, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் சகுனி தவிர்த்து மற்ற இரு படங்கங்கள் வசூலில் சறுக்கின.

அடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி 2013ல் ரிலீஸ் ஆகின. இவை கார்த்திக்கு மேலும் சரிவைத்தான் தந்தன. 2014ல் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் இவரது முந்தைய படங்களின் வசூல் சரிவை சரிக் கட்டியது.

2015ல் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த கொம்பன் வெற்றி பெற்றதன் மூலம் கதை தேர்வுகளின் காரணமாக கார்த்தி படங்கள் தோல்வியடைந்ததை அவருக்கு உணர்த்தியது.

தெலுங்கு நடிகர் நாகர்சுனாவுடன் இணைந்து நடித்த தோழா தமிழ் பதிப்பு சுமாரான வெற்றியைப் பெற்றது. அதனை தொடர்ந்து மிககஷ்டப்பட்டு இவர் நடித்து வெளியான காஷ்மோரா தயாரிப்பாளருக்கு மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 2016ல் வெளியான காற்று வெளியிடை படம் காற்று போன பலூன் கணக்காக கார்த்திக்கை ஆக்கியது.

காவல்துறை அதிகாரி வேடம், காக்கி காஸ்ட்யூம் அணிந்து கார்த்தி நடித்த படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் மீண்டும் காவல்துறை அதிகாரி வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.

இந்தப் படம் இன்று 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரீலீஸ் ஆகிறது. இப்படத்தில் குற்றவாளிகளை தேடிச் சென்று அழிக்கும் காவல்துறை அதிகாரி வேடம் ஏற்றிருக்கிறார் கார்த்தி.

வெற்றி பெற்ற 'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய வினோத் இப்படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

டீரீம் வாரியர், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். சுமார் 16 கோடி ரூபாய் வரை விநியோகம், மினிமம் கேரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டிருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று வசூல் அடிப்படையில் கார்த்தி கரை ஏற உதவும் என்கிறார்கள். பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X