இந்தி பேசப்போகும் 'தோழா'.. நாகார்ஜுனா வேடத்தில் அமிதாப்பச்சன்?
மும்பை: 'தோழா' இந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 25 ம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியான படம் 'தோழா'. உடல் செயலிழந்து சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டும் கோடீஸ்வரராக நாகர்ஜுனா நடித்திருந்தார்.
அவரைப் பார்த்துக் கொள்ளும் வேடத்தில் கார்த்தியும், நாகார்ஜுனாவின் செகரட்டரியாக தமன்னாவும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பிரபல தெலுங்கு இயக்குநர்களில் ஒருவரான வம்சி இப்படத்தை இரு மொழிகளிலும் சுவாரஸ்யம் குன்றாமல் இயக்கியிருந்தார்.
தமிழ், தெலுங்கு என 2 மொழி ரசிகர்களும் ரசிகர்களும் கொண்டாடிய இப்படத்தின் இந்தி உரிமையை, பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் கைப்பற்றியிருக்கிறார்.
மேலும் நாகார்ஜுனா வேடத்தில் அமிதாப் பச்சனையும், கார்த்தி வேடத்தில் வருண் தவானையும் நடிக்க வைக்க கரண் ஜோஹர் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
கடந்த வருடம் வெளியான பிக்கு படத்தில் வயதானவராக அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் அவருக்கு பரிசளித்தது.
இதனைக் கருத்தில் கொண்டே இப்படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க கரண் ஜோஹர் முயற்சித்து வருகிறாராம்.
தற்போது இப்படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கி விட்டதாவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











