Viruman Box Office: கார்த்தி படங்களிலேயே இதுதான் அதிக கலெக்‌ஷனாம்.. வசூல் வேட்டையில் விருமன்!

சென்னை: விருமன் படம் அதே அரைத்த மாவாக இருக்கிறதே, இருந்தாலும் இந்த படத்தை எப்படி தியேட்டருக்கு வந்து கொண்டாடுறாங்க என சில விமர்சகர்கள் விமர்சனத்திலேயே புலம்பும் அளவுக்கு விருமன் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் களைகட்டி இருக்கிறது.

என் படத்துக்கு முதல் நாள் இவ்வளவு கூட்டமா என அதிதி ஷங்கர் வாய் பிளந்து பார்க்க, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முதல் நாள் கலெக்‌ஷனுக்கு ஈடாக விருமன் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அப்பா - மகன் பிரச்சனையை மையமாக வைத்து பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை முன்னிறுத்திய நிலையில், தாய்மார்களின் ஆதரவு ஊர் பக்கங்களில் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட நகரங்களில் கிடைத்துள்ளது.

விருமன் விமர்சனம்

விருமன் விமர்சனம்

கார்த்தியின் நடிப்பு காட்சிக்கு காட்சி எனர்ஜி டானிக்காக உள்ளது என விருமன் படத்தை விமர்சனம் செய்த பல பேர் புகழ்ந்து தள்ளி விட்டனர். பருத்தி வீரனில் பார்த்த கார்த்தியை விட இன்னமும் இளமையான கார்த்தியாக விருமன் படத்தில் மாஸ் காட்டியிருக்கிறார். அதிதி ஷங்கரின் அறிமுக படம் என்பதே தெரியாமல் அவரும் தனது வித்தையை ஏகப்பட்ட ஸ்பூன் அள்ளித் தெளித்துள்ளார். கலவையான விமர்சனங்களை அள்ளினாலும், கலெக்‌ஷன் நல்லாவே வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கம்மி பட்ஜெட்

கம்மி பட்ஜெட்

கிராமத்துப் புற கதை என்பதால் 2டி நிறுவனம் பெரிய பட்ஜெட் எல்லாம் செலவு செய்யவில்லை. கார்த்தியின் சம்பளத்தோடு சேர்த்து ஒட்டுமொத்தமாகவே 25 கோடி தான் படத்திற்கு பட்ஜெட் என்கின்றனர். ஆனால், அதை முதல் வாரத்திலேயே எடுத்து விருமன் வெற்றி பெற்று விடும் என்கிற பேச்சுக்கள் திரையுலகில் எழுந்துள்ளன.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

தமிழ்நாட்டில் விருமன் திரைப்படம் 5.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் உலகளவில் விருமன் படத்தின் முதல் நாள் வசூல் ஒட்டுமொத்தமாக 7 முதல் 8 கோடி வரை இருக்கும் என்கின்றனர். ஜாலியான படமாக வந்துள்ள விருமன் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர்.

போட்டி இல்லை

போட்டி இல்லை

விருமன் படத்திற்கு போட்டி என்று பார்த்தால் அமீர்கானின் லால் சிங் சத்தாவின் தமிழ் வெர்ஷன் தான். இந்தியிலேயே அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு ஆட்கள் வராத நிலையில், போட்டியே இல்லாத நிலை தான் இங்கே நிலவி உள்ளதாக கூறுகின்றனர். லால் சிங் சத்தா படத்தின் காட்சிகளை குறைத்து விட்டு விருமன் படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தினம் என்பதால் விருமன் படம் இந்த வாரம் சூப்பரான வசூல் வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் லால் சிங் சத்தா படத்திற்கு பதிலாக விக்ரமின் கோப்ரா படத்தை இந்த வாரம் வெளியிட்டு இருந்தால் வேறலெவல் வசூல் அந்த படத்திற்கும் வந்திருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X