விருமன் ரிலீஸ்ல என்ன பஞ்சாயத்து?: கார்த்தி ரசிகர்கள் இப்படி ஒரு அதிர்ச்சிய எதிர்பார்க்கலல?
சென்னை: கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விருமன்' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் எனத் தகவல்.
விக்ரமின் 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதியால் கார்த்தியின் 'விருமன்' படத்தின் வெளியீட்டுக்கு எழுந்த சிக்கல்.
ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகவிருந்த கார்த்தியின் 'விருமன்', யுவன் மனசு வைத்தால் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகும் எனத் தகவல்.
கொம்பன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி, இயக்குநர் முத்தையா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'விருமன்.' கார்த்தியின் அண்ணன் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். விருமன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

வில்லேஜ் ஆக்சன் ட்ரீட்
இயக்குநர் முத்தையாவின் முந்தைய படங்கள் போன்றே, விருமனும் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ளது. பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ள ‘விருமன்' படத்தில், ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

கோப்ராவால் வந்த சிக்கல்!
இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா' படத்தோட ரிலீஸ் தேதியால, ‘விருமன்' படத்துக்கு சிக்கல்கள் இருக்குறதா சொல்லப்படுது. விக்ரமின் கோப்ரா ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகவிருந்துச்சு. இப்போ சில காரணங்களால அந்த மூவியோட ரிலீஸ் தேதிய மாத்தப் போறாங்களாம். இந்த தகவல் உண்மையா இருந்தா, கோப்ரா ஆகஸ்ட் 31ம் தேதில ரிலீஸாகும்ன்னு சொல்லப்படுது. அதனால கார்த்தியோட விருமன் படத்த, ஆகஸ்ட் 11ம் தேதியே ரிலீஸ் பண்ணிடலாம்ன்னு படக்குழு பேசிட்டு இருக்காங்களாம்.

யுவன் தான் மனசு வைக்கணும்!
விருமன் படத்துக்காக ‘கஞ்சாபூவு கண்ணால'ங்குற சூப்பரான ஃபர்ஸ்ட் சிங்கிள் கொடுத்து அசத்துன யுவன், இந்தப் படத்தோட பின்னணி மியூசிக் கம்போஸ் பண்றதுல பிஸியா இருக்காராம். அதனால அவரு மனுச வச்சா தான் விருமன் படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ண முடியும்ன்னு சொல்லப்படுது. இதுக்காக படக்குழு தரப்புல இருந்து யுவன்கிட்டயும் பேச்சுவார்த்தை நடத்தினதா தகவல் கிடைச்சிருக்கு.
Recommended Video

கார்த்தி ரசிகர்கள் ரெடியா?
விருமன் படத்தோட ரிலீஸ் தேதி பத்தி வர்ற அப்டேட்ஸ்லாம், கார்த்தியோட ரசிகர்களுக்கு குழப்பமா இருந்தாலும், படம் சீக்கிரமாவே ரிலீஸாகும்ன்னு நம்பிக்கையோட இருக்காங்க. ஆனாலும் இன்னும் இதுபத்தின அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்ன்னு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











