பருத்திவீரன் பார்ட் 2 ஆ ?... மீண்டும் கிராமத்து கெட்அப்பில் கம்பீரம் காட்டும் கார்த்தியின் விருமன்

சென்னை : கார்த்தியின் புதிய படமான விருமன் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு முரட்டுத்தனமான கிராமத்து இளைஞர் கெட்அப்பில் கம்பீரம் காட்டி உள்ளார் கார்த்தி.

டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி - முத்தையா காம்போவில் உருவாகி உள்ள இரண்டாவது படம் இது. டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக இந்த படத்தில் அறிமுகமாகி உள்ளார்.

சூர்யா- கார்த்தி இணையும் படம்

சூர்யா- கார்த்தி இணையும் படம்

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், ஆர்.கே.சுரேஷ், மனோஜ், சூரி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விருமன் ஃபஸ்ட்லுக்

விருமன் ஃபஸ்ட்லுக்

பருத்திவீரன் படத்திற்கு பிறகு மதுரையை சுற்றி எடுக்கப்பட்ட கார்த்தி படம் விருமன். மதுரை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. டிசம்பர் மாதத்தில் ஷுட்டிங் முடிந்ததை தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு விருமன் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

கம்பீரமாக லுங்கியில் கார்த்தி

கம்பீரமாக லுங்கியில் கார்த்தி

இதில், சிவப்பு நிற சட்டை, லுங்கியில் கையில் வேல் கம்புடன், பாறையின் மீது கம்பீரமான தோற்றத்தில் அமர்ந்திருக்கும் கார்த்தியின் வித்தியாசமான லுக் ரசிகர்களுக்கு பருத்திவீரன் படத்தை நினைவுபடுத்தி உள்ளது. தமிழ், ஆங்கிலத்தில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இது தான் கதையா

இது தான் கதையா

கார்த்தி மற்றும் சூர்யா இணைந்து பொங்கல் கொண்டாடிய போட்டோ ஒரு புறம் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் விருமன் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கொம்பன் படத்தை போல் இதுவும் குடும்ப, என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. காதலுடன், சோஷியல் மெசேஜ் கலந்து விருமன் படத்தின் கதை சொலல்லப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X