‘விருமன்‘ கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு.. யுவனின் இசையில் நெஞ்சை அள்ளும் பாடல்!
சென்னை : நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள 'கஞ்சா பூ கண்ணாலே'என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
இப்படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விருமன்
கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். விருமன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றது.

குடும்ப கதை
கிராமத்து கதை அம்சம் கொண்ட இப்படத்தில் குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி ஷங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார பெண்ணாக நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘கஞ்சா பூ கண்ணாலே'
நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான இன்று விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள 'கஞ்சா பூ கண்ணாலே'என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது, யுவன் சங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடலை மணிமாறன் என்பவர் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கொஞ்சம் பிஸி
கார்த்தி தற்போது வரலாற்று சிறப்பு மிக்க பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும், சர்தார் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநர் முத்தையாவும் தனது அடுத்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











