Don't Miss!
- News
தமிழுக்கு மாபெரும் "கவுரவம்".. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விருமன் வாரான்...கார்த்தியின் மாஸ் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
சென்னை : கார்த்தியின் விருமன் படத்தின் ரிலீஸ் தேதியை புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. முக்கிய நாளில் படம் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் செம ஆர்வமாக உள்ளனர்.
2021 ம் ஆண்டு நடித்த சுல்தான் படத்திற்கு பிறகு, தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. விருமன், சர்தார், பொன்னியின் செல்வன், கார்த்தி 24, கார்த்தி 25 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.
தற்போது விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. கொம்பன் படத்திற்கு பிறகு டைரக்டர் முத்தையாவுடன் கார்த்தி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
அரை
டவுசரோடு
பல்
துலக்கியபடி
கதை
கேட்ட
நடிகர்
-
கோபத்தில்
உதவி
இயக்குநர்
செய்த
காரியம்

விமர்சிக்கப்பட்ட ஃபர்ஸ்ட் சிங்கிள்
கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், கருணாஸ், பிரகாஷ் ராஜ், சரண்யா நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் விருமன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. கஞ்சாப்பூ கண்ணாலே என துவங்கும் இந்த பாடல் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கார்த்தி நடித்த பருத்திவீரன், கொம்பன் படங்களின் கலவையாகவே இந்த பாடல் அமைக்கப்பட்டிருந்ததாக விமர்சிக்கப்பட்டது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
முழுக்க முழுக்க கிராமத்து கதையாக அமைக்கப்பட்டுள்ள விருமன் படத்தின் ஷுட்டிங் மதுரை, திண்டுக்கல், தேனி பகுதிகளில் படமாக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருமன் பட ஷுட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் கார்த்தியின் புதிய போஸ்டருடன் இன்று அறிவித்துள்ளது.

செம மாஸ் லுக்கா இருக்கே
2022 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31 ம் தேதியன்று விருமன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட திருவிழா பேக்கிரவுண்டில் ஆள் உயர அரிவாளை பிடித்த படி கார்த்தி போஸ் கொடுத்து நிற்கும் போஸ்டர், ரிலீஸ் தேதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. கண்ணில் கூலிங் கிளாஸ், படித்து வாரிய தலை, பக்கா கிராமத்து லுக்கில் ஸ்டைலாக சிரித்த படி கார்த்தி நிற்கும் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரே ஆண்டில் 3 படங்கள்
கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருவதால், எந்த படம் முதலில் ரிலீசாக உள்ளது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார். கார்த்தியின் சர்தார் படமும் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் கார்த்தியின் 3 படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.