Don't Miss!
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்: என்ன பயன் ஏற்படும்?
- News
திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி! ஏர்போர்ட்டில் வரவேற்கும் முதலமைச்சர்!
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிறைவடைந்தது விருமன் படப்பிடிப்பு... அண்ணன் சூர்யாவுக்கு நன்றி சொன்ன தம்பி கார்த்தி!
சென்னை: முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
தாமரைக்காக
டிரான்ஸ்லேட்டராக
மாறிய
பிரியங்கா..
சிபி
மனைவி
யார்
ஜெயிக்கணும்னு
சொன்னாங்க
தெரியுமா?
கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் "விருமன்" படத்தை நடிகர் சூரியாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

நேற்றுடன் நிறைவு
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் தொடங்கியது. தொடர்ந்து மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 60 நாட்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு டிசம்பர் 21ஆம் தேதியான நேற்று நிறைவடைந்தது.

60 நாட்களில் படப்பிடிப்பு
இதில் பேசிய நடிகர் கார்த்தி, இயக்குநர் முத்தையா, படக்குழுவினர் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் குறித்து பாராட்டி பேசினார். அவர் பேசியதாவது, "மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாள்கள் படபிடிப்பை நடத்தி உள்ளார்கள் இயக்குநர் முத்தையாவும் , ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும்.

நடித்த நாட்கள் ஜாலியானவை
இந்தப் படத்தில் என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது,எதார்த்தமானவர். அவருடன் நடித்த நாட்கள் ஜாலியானவை. மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம். 2D நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி! என்றார் நடிகர் கார்த்தி.

கனமான பாத்திரம்
இதனிடையே இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அதிதி ஷங்கர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.

உறவுகளின் கதை
இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகிவுள்ளது.

விரைவில் டிரெய்லர் ரிலீஸ்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விருமன் திரைப்படம் 2022ஆம் ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.