கத்தி பேசுறது..கத்தியை காட்டி பேசுறது விருமனுக்கு பிடிக்காது..வெளியானது விருமன் டிரைலர்!

சென்னை : சூர்யாவின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் டிரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

தந்தை மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள விருமன் படத்தில், அதிதி சங்கர், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.

விருமன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விருமன்

விருமன்

கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். அதிதி சினிமாவில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.

குடும்ப உறவு கதை

குடும்ப உறவு கதை

கிராமத்து கதை அம்சம் கொண்ட இப்படத்தில் குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி ஷங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார பெண்ணாக நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றது.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ராஜா முத்தையா மன்றத்தின் இந்த இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நடந்து வருகிறது. இந்த விழாவில் ஷங்கர் விருமன் டிரைலரை வெளியிட்டார். அடிதடி சண்டை அதிரடி பாடல்களுடன் வெளியான இந்த டிரைலர் தரமாக உள்ளது. இந்த டிரைலரை பார்த்த ஷங்கர் எதிர்பார்த்ததை விட டிரைலர் சிறப்பாக இருக்கு, வெற்றி கண்ணில் தெரிகிறது என்றார்.

ரிலீஸ் தேதி

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. முன்னதாக இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், திடீர் என இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 12ந் தேதியே திரையரங்கில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X