கார்த்தியுடன் மோதவிருந்த சிவகார்த்திகேயன்.. இப்ப கதையே வேற!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரின்ஸ். இந்தப் படத்தில் டீச்சராக அவர் நடித்துள்ளார்.

Recommended Video

Prince - Sivakarthikeyan-னின் முதல் Bilingual படம் | ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood

படம் ஆகஸ்ட்டில் வெளியாக உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பிரின்ஸ் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு வீடியோ மூலம் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். விஜய், அஜித் வரிசையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அவரது டாக்டர், டான் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது.

அடுத்தடுத்த வெற்றிகள்

அடுத்தடுத்த வெற்றிகள்

டாக்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது, டான் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவிய நிலையில், டாக்டர் படத்தை காட்டிலும் டான் படம் மேலும் சிறப்பான விமர்சனம் மற்றும் வசூலை குவித்தது. மேலும் தொடர்ந்து இந்தப் படங்களின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளும் சிறப்பான வசூலை சிவகார்த்திகேயனுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

தயாரிப்பாளராகவும் சக்சஸ்

தயாரிப்பாளராகவும் சக்சஸ்

இந்த இரு படங்களையும் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்த நிலையில், நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் அவர் சக்சஸ் காட்டியுள்ளார். ஆரம்பத்தில் சுமாரான படங்களை கொடுத்துவந்த சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முதல் சுக்ர திசை ஆரம்பமானது. அது தொடர்ந்து வருகிறது.

பக்கத்து வீட்டுப் பையன் லுக்

பக்கத்து வீட்டுப் பையன் லுக்

தமிழ் சினிமாவில் பக்கத்து வீட்டுப் பையன் போன்ற லுக் கொண்ட ஹீரோக்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வரும் நிலையில், அந்த வரிசையில் எப்போதோ இணைந்துவிட்டார் சிவகார்த்திகேயன். இவருக்கு விஜய், அஜித் வரிசையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

பிரின்ஸ் படம்

பிரின்ஸ் படம்

இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் பிரின்ஸ் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், முன்னதாக படம் ஆகஸ்ட்டில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 30ல் வெளியாகவுள்ள கார்த்தியின் விருமன் படத்துடன் சிவார்த்திகேயன் மோதவுள்ளதாக கூறப்பட்டது.

தீபாவளி பந்தயத்தில் பிரின்ஸ்

தீபாவளி பந்தயத்தில் பிரின்ஸ்

இந்நிலையில் இன்றைய தினம் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன். தீபாவளி பந்தயத்தில் தன்னுடைய படத்தை அவர் இணைத்துள்ளார். இதுகுறித்து சிறப்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் விருமன் படத்துடன் மோதாமல் தற்போது தீபாவளியில் ரிலீசாக உள்ளது பிரின்ஸ்.

சர்தாருடன் மோதல்

சர்தாருடன் மோதல்

ஆனால் இதில்தான் ட்விஸ்ட்டே உள்ளது. கார்த்தியின் விருமன் படத்துடன் தான் மோதல் இல்லை. ஆனால் கார்த்தியின் சர்தார் படத்துடன் தற்போது மோத தயாராகியுள்ளது பிரின்ஸ். கார்த்தி படத்தின் மோதலை தவிர்த்து தற்போது கார்த்தி படத்துடன் மோதவுள்ளது பிரின்ஸ். எது எப்படியோ தீபாவளிக்கு தற்போது பிரின்ஸ், சர்தார் மற்றும் ஜெயம் ரவியின் இறைவன் என ரசிகர்களுக்கு ட்ரீட் காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X