கண்ணா மூனு லட்டு திங்க ஆசையா? சர்தார் 2 படத்தில் 3 கதாநாயகிகள்! எல்லாம் தரமா இருக்காங்களே!
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் 2. இந்த படம் கடந்த 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு, கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படிப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லையே என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்த நிலையில் புதிய தகவல் ஒன்று உலா வருகின்றது. அதாவது சர்தார் 2 படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர் என்பதுதான் அது.
தண்ணீர் மாஃபியாவை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதில் ஒரு கார்த்தி உளவாளியாக நடித்து கண்ணீர் சிந்தவைத்திருந்தார். இந்த படம் மக்கள மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் ரூபாய் நூறு கோடி வசூல் செய்தது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் வெற்றி கார்த்திக்கு இந்த படத்தினை இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அப்படி இருக்கும்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகள் இணையத்தில் உலா வந்தது. அதன் பின்னர் இதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்தார் படத்தின் 2ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியானது. கடந்த 12ஆம் தேதி படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. மேலும் 15ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
படப்பிடிப்பு தொடங்கிய மறுநாள் அதாவது ஜூலை 16ஆம் தேதி படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. கார்த்தி உயிரிழந்த ஏழுமலையின் வீட்டிற்குச் சென்று, அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
படப்பிடிப்பு: சென்னையில் சாலி கிராமத்தில் உள்ள பிராசாத் ஸ்டூடியோவில் இந்த படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாகவும் அதேநேரத்தில் மிகவும் கவனமாகவும் நடைபெற்று வருகின்றது. படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.
மூன்று கதாநாயகிகள்: சர்தார் 2 படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார் என்ற தகவலே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது உலா வரும் மூன்று கதாநாயகிகள் என்ற பேச்சும் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
இதில் ஆஷிகா ரங்கநாத் ஏற்கனவே படத்து அரசன் படத்தில் நடித்தவர். சர்தார் 2 படத்தில் இவர் எஸ்.ஜே. சூர்யாவின் ஜோடியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











