ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன வந்தியத்தேவன் கார்த்தி.. அந்த பிரச்சனை கிளப்பிய நெட்டிசன்கள்!

சென்னை: ஜெயம் ரவியை தொடர்ந்து சியான் விக்ராம் மற்றும் கார்த்தி என பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் ரஜினிகாந்த் போனில் அழைத்து வாழ்த்தியதற்கும், கமல் நேரடியாக படத்தை பார்த்து பாராட்டியதற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

கமல் மற்றும் ரஜினிக்கு ஒரே ட்வீட்டில் நடிகர் கார்த்தி தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அதை வைத்து சில நெட்டிசன்கள் பிரச்சனை ஒன்றையும் கிளப்பி உள்ளனர்.

கமல் சொன்ன விஷயம்

கமல் சொன்ன விஷயம்

மருதநாயகம் படத்தில் குதிரை மேல் கமல் வரும் காட்சி இன்னமும் என் கண்களிலேயே நிற்கிறது என பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டில் கார்த்தி பேசியதும், அந்த கஷ்டம் எனக்கு நன்றாகவே தெரியும். போர்க் காட்சிகளை படமாக்குவது, குதிரை, யானைகளை நடிகர்களுடன் இணைந்து நடிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமில்லை என பாராட்டி இருந்தார்.

350 கோடி வசூல்

350 கோடி வசூல்

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 6 நாட்களில் 350 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து திரையிட்ட இடங்களில் எல்லாம் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருவதாக கூறுகின்றனர். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இந்த ஆண்டு அதிக வசூலை ஈட்டிய இன்னொரு தமிழ் படமாக பொன்னியின் செல்வன் மாறி உள்ளது.

ரஜினிக்கு நன்றி சொன்ன ஜெயம் ரவி

ரஜினிக்கு நன்றி சொன்ன ஜெயம் ரவி

ரஜினி, கமல் இன்னமும் படத்தை பார்க்கவில்லையா? பாராட்ட வில்லையா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் போனில் அழைத்து பாராட்டினார் என ஜெயம் ரவி போட்ட ட்வீட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

கார்த்தி நன்றி

கார்த்தி நன்றி

கமல்ஹாசன் சியான் விக்ரம் மற்றும் கார்த்தி உடன் ஐமேக்ஸ் தியேட்டரில் படத்தை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டி உள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு ஒரு சேர நன்றியை தெரிவித்துள்ளார் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கார்த்தி.

மதிப்பும் அன்பும்

மதிப்பும் அன்பும்

எங்களுக்கு எல்லாம் திரைத்துறையில் ஒரு பெரிய உதாரணமாக இருந்து ஊக்கம் அளித்து வருகிறீர்கள் கமல் சார். அதை விட ஒருத்தரை ஒருத்தர் எப்படி மதிக்கணும், அன்பு செலுத்த வேண்டும் என்பதை நிறையவே கற்றுக் கொடுத்துள்ளீர்கள். இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டியதற்கு உங்களுக்கு மிகப்பெரிய நன்றி என கார்த்தி ஒரு போஸ்ட்டை போட்டுள்ளார்.

ஸ்பெஷல் போன் கால்

ஸ்பெஷல் போன் கால்

இன்னொரு கார்டில் ரஜினி சார் உங்க அந்த போன் கால் ரொம்பவே ஸ்பெஷல் ஆன ஒன்று. படக்குழுவினர் அனைவரையும் அழைத்து அவர்களின் உழைப்பை பாராட்ட வேண்டும் என நினைக்கும் அந்த பண்பு மிகப்பெரியது. படத்தையும் எங்கள் உழைப்பையும் அங்கீகரித்ததற்கு மிகப்பெரிய நன்றிகள் என ரஜினிக்கும் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

 யார் பெயர் முதலில்

யார் பெயர் முதலில்

கமல்ஹாசனின் பெயர் முன்னாடியும், ரஜினிகாந்தின் பெயர் பின்னாடியும் போட்டு ட்வீட் போட்டு இருக்கீங்க என இங்கேயும் யார் பெயர் முதலில் வருவது என்கிற சண்டையை ரஜினி ரசிகர்கள் ஸ்டார்ட் செய்துள்ளனர். ஆனால், அதற்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்க கார்த்தி விரும்பவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X