அண்ணன் சூர்யாவுக்கு பிறந்தநாள்.. பாசமுள்ள தம்பி சொன்ன வாழ்த்தை பார்த்தீங்களா.. சூப்பர் பிரதர்ஸ்!
சென்னை: பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வராக ஆன பின்னர் கூட, அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதை பார்த்து நாடே அவரது பாசத்தை பாராட்டியது. அண்ணன், தம்பி எப்போதும் ராமர், லட்சுமணன் மாதிரி தான் இருக்கணும் என்பதை மற்ற பெற்றோர்களை விட சிவகுமார் அதிகமாகவே சொல்லி வளர்த்து இருப்பார்.
அண்ணன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தம்பி கார்த்தி பதிவிட்டுள்ள வாழ்த்து ட்வீட் ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. விக்ரம் படத்தில் கடைசியில் என்ட்ரி கொடுக்கும் ரோலக்ஸ் ஸ்க்ராட்ச்ல இருந்து மறுபடியும் தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கப் போகிறேன் என சொல்வார்.

அதே போல ஜீரோவில் இருந்து ஹீரோவாக முடியும் என்பதை சாதித்துக் காட்டியவர் என் அண்ணன் என நடிகர் கார்த்தி தற்போது அண்ணன் சூர்யாவுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளார்
சூப்பர் பிரதர்ஸ்: பழம்பெரும் நடிகர் சூர்யாவின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி கைதி 2 படத்தில் நேருக்கு நேர் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், கங்குவா படத்திலேயே அவர்கள் இருவரையும் சிறுத்தை சிவா நடிக்க வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. சீக்கிரமே இருவரையும் ஒரே ஸ்க்ரீனில் ரசிகர்கள் பார்த்து மிரள காத்திருக்கின்றனர்.

கதை தேர்வு: வெறும் கமர்ஷியல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் கமர்ஷியல் படமாகவே இருந்தாலும், அதிலும் ஏதாவது கருத்து இருக்க வேண்டும் என்பதில் சூர்யாவும், கார்த்தியும் உறுதியாக இருந்து வருவது அவர்களின் கதை தேர்வுகளை பார்த்தாலே தெரிந்து விடும். கார்த்தியை வைத்து படம் இயக்கிய சிவா இன்றைக்கும் சிறுத்தை சிவா என்று தான் அழைக்கப்படுகிறார். லோகேஷ் கனகராஜுக்கு கைதி, எச். வினோத்துக்கு தீரன் அதிகாரம் ஒன்று, பி.எஸ். மித்ரனுக்கு சர்தார் என கார்த்தி பல இயக்குநர்களை டாப் இயக்குநர்களாக மாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணனுக்கு வாழ்த்து: ஜீரோவில் இருந்து தொடங்கினாலும் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை எனக்கு கற்றுக்கொடுத்த உன்னதமான மனிதனுக்கு இன்று பிறந்தநாள். அண்ணன் சூர்யாவுக்கும் அவர் வழியில் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் கருத்துக்களை பகிர்ந்து வரும் அன்பான ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகள் என கார்த்தி பதிவிட்டுள்ளார். அண்ணன் சூர்யாவுடன் வேட்டி சட்டையில் செம அழகாக இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











