Karthi: கார்த்தியுடன் ஜோடி சேரும் சீரியல் நடிகை... என்ன..? பருத்திவீரன் நிலைமை இப்படி ஆய்டுச்சு!

சென்னை: கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம், இந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது.

ராஜூ முருகன் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை.

Karthi: Serial Actress Swathi Konde Play An Important Role In Karthi 27

இதனையடுத்து தனது 27வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் கார்த்தி.

இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக சீரியல் நடிகை ஒருவர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தியுடன் ஜோடி சேரும் சீரியல் நடிகை
கோலிவுட்டின் கோல்டன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கார்த்தி. கடந்தாண்டு ஹிட் மேல் ஹிட் கொடுத்த கார்த்தி, இந்தாண்டு பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் படங்களை நம்பி ஏமாந்துபோனார். தீபாவளி ஸ்பெஷலாக இந்த மாதம் 10ம் தேதி வெளியான ஜப்பான் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

ராஜூ முருகன் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில், கேஎஸ் ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜப்பான் கார்த்தியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் தோல்வி ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான பருத்திவீரன் பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஆனால், கார்த்தியோ இதுவரை பருத்திவீரன் பட பிரச்சினை குறித்து வாய் திறக்காமல் உள்ளார். இந்நிலையில், தனது 27வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார் கார்த்தி. நலன் குமாரசாமி இயக்கும் 'கார்த்தி 26’ படத்தில் நடித்து வந்த அவர், தற்போது 'கார்த்தி 27’ ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். 96 மூவி மூலம் பிரபலமான பிரேம்குமார், கார்த்தி 27 படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் கும்பகோணத்தில் தொடங்கியது. இதில் கார்த்தியுடன் அரவிந்த் சாமி முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி 27 படத்தின் நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கன்னட நடிகை ஸ்வாதி கொண்டா கார்த்தி ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

கன்னடத்தில் பியூட்டிஃபுல் மனசுகலு, கமரோட்டு செக்போஸ்ட், வெண்ணிலா, கட்டு கதே ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஸ்வாதி கொண்டே. அதேபோல், தமிழில் ஈரமான ரோஜாவே 2 சீரியலிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கார்த்தியுடன் முன்னணி நடிகைகள் யாராவது நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீரியல் நடிகையை படக்குழு கமிட் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X